புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ராதிகாவை அடைய வெறிபிடித்து திரியும் கோபி.. இனிமே தான் பயங்கரமா இருக்கப்போகுது

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கோபி தயாராகிவிட்டார். இதைப்பற்றி கோபி தன்னுடைய அம்மா ஈஸ்வரிடம் தெரிவித்தபோது, அவர் கோபத்தில் கோபியை அறைந்து விடுகிறார்.

அதன்பிறகு கோபியின் இத்தகைய முடிவை ஈஸ்வரி கணவர் ராமமூர்த்தியிடமும் தெரிவிக்கிறார். இதைக்கேட்டு ஆடிப்போன ராமமூர்த்தி, மருமகள் பாக்யாவிடம் இதைப் பற்றி எதுவும் தெரிவிக்க வேண்டாம். அவர் மனம் உடைந்து போவார் என்று ஈஸ்வரியின் வாயை அடிக்கிறார்.

Also Read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் சன் டிவி.. விட்டுக்கொடுக்காமல் மல்லுக்கட்டும் விஜய் டிவி

ஏற்கனவே பாக்யாவின் மீது கோபத்தில் இருக்கும் ஈஸ்வரி, விவாகரத்துக்குப் பிறகு பாக்யா கோபியை வீட்டை விட்டு வெளியேற்றியதனால்தான் இப்படிப்பட்ட விபரீதம் ஏற்பட்டதாக அவர் மீது பழி போடுகிறார். ஆனால் கோபி வீட்டை விட்டு வெளியேறி, செய்த தவறை நினைத்து வருந்தி மனம் திரும்பி, குடும்பத்தில் தான் முக்கியம் என மீண்டும் வீட்டிற்கு வருவார் என்ற எண்ணத்தில்தான் பாக்யா அப்படி செய்ததாக ராமமூர்த்தி ஈஸ்வரியை சமாதானப்படுத்துகிறார்.

அதன்பிறகு கோபியை சந்தித்து பேசி இந்த கல்யாணத்தை நடத்த விடாமல் செய்கிறேன் என்று ஈஸ்வரியிடம் சத்தியம் செய்துவிட்டு ராமமூர்த்தி கோபியை பார்க்க போகிறார். கோவிலில் கோபியும் ராமமூர்த்தியும் சந்திக்கின்றனர். அப்போது ராமமூர்த்தி கோபியுடன், ‘இந்த திருமணம் ரொம்ப ரொம்ப தவறான முடிவு.

Also Read: சைடு கேப்பில் சில்லரைத்தனமான சேட்டை செய்யும் கோபி.. விழி பிதுங்கி நிற்கும் பாக்யாவின் குடும்பம்

இதனால் யாருக்குமே நன்மை கிடையாது. இனியாவை கொஞ்சம் யோசித்துப் பார்’ என கெஞ்சி கதறுகிறார். அப்போதுகூட கோபி மனம் இரங்காமல், ‘இப்படிப்பட்ட எமோஷனல் டயலாக் எல்லாம் பேசி என்னை பிளாக்மையில் செய்யாதீர்கள்.

யார் தடுக்க நினைத்தாலும் ராதிகாவிற்கு எனக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும். பாக்யாவுக்கும் எனக்கு இருந்த உறவு முடிந்தது முடிந்ததுதான்’ என்று வெறுப்புடன்பேசி கிளம்பி விடுகிறார் சின்னத்திரை சிம்பு கோபி. இதன் பிறகு ராமமூர்த்தி இந்த திருமணத்தை எப்படி நிறுத்துவது என யோசிக்கிறார்.

Also Read: இந்த 6வது சீசனில் நிச்சயம் சம்பவம் இருக்கு.. இணையத்தில் லீக்கான பெண் போட்டியாளர்களின் லிஸ்ட்

மறுபுறம் மண்டபத்திற்கு கிளம்புவதற்காக தடபுடலாக ஏற்பாடுகள் ராதிகா வீட்டில் நடக்கிறது. ராதிகாவும் புதுப்பொண்ணு போல் குடும்பத்தினருடன் மிக சந்தோசமாக இந்த இரண்டாவது திருமணத்தை செய்து கொள்ள தயாராகிறார்.

Trending News