ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

முத்துவேல் பாண்டியன் காட்டிய பயம்.. நடு நடுங்கி போய் பின்வாங்கிய மாஸ் ஹீரோக்கள்

Actor Rajini: சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜெயிலர் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ரிலீசுக்கு முன்பே மிகப்பெரும் ஆவலை தூண்டியிருந்த இப்படம் தற்போது வரலாறு காணாத வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் முதல் நாளிலேயே 100 கோடியை நெருங்கி சாதனை படைத்திருந்த இப்படம் 5 நாள் முடிவில் 350 கோடி வரை வசூலித்துள்ளது. இதுதான் தற்போது முன்னணி நாயகர்களை கொஞ்சம் அசைத்து பார்த்திருக்கிறது. ஏனென்றால் ரஜினி இனிமேல் இண்டஸ்ட்ரி ஹிட் எல்லாம் கொடுக்க மாட்டார் என்ற பேச்சு தான் ஜெயிலருக்கு முன்பு வரை இருந்தது.

Also read: 48 ஆண்டுகள், சரித்திர சாதனை படைத்த ரஜினி.. சூப்பர் ஸ்டாரை அடையாளம் காட்டிய படம்

ஆனால் அதையெல்லாம் தரைமட்டமாக்கி மாஸ் காட்டி இருக்கிறது முத்துவேல் பாண்டியனின் இந்த அலப்பறை. ரசிகர்கள் எப்படி ரஜினியை ரசிப்பார்களோ அதை அப்படியே கொடுத்திருக்கும் நெல்சனும் இதன் மூலம் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு கொண்டாடப்பட்டு வரும் ஜெயிலர் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அமோக வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதனாலயே அங்கு இருக்கும் மாஸ் ஹீரோக்கள் கூட தங்கள் பட வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்களாம்.

Also read: விக்ரம் படம் ஒன்னும் கமலால ஓடல.. ரஜினியை மிஞ்சிட்டோமுன்னு நினைக்கவே கூடாது ஏன் என கூறும் பிரபலம்

அதிலும் கடந்த 11ம் தேதி தெலுங்கில் வெளியான சிரஞ்சீவியின் போலா சங்கர் போட்ட வசூலை எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் ஆன அப்படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் இப்போது வரை அப்படம் வெறும் 23 கோடி தான் வசூலித்து இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் ஜெயிலர் தெலுங்கு திரை உலகில் காட்டும் மாஸ் தான். ஒருவேளை சிரஞ்சீவி தன் படத்தை வேறு நாளில் வெளியிட்டு இருந்தால் கூட ஓரளவு லாபம் பார்த்திருப்பார். ஆனால் இப்போது கடும் நஷ்டம் அடைந்தது தான் மிச்சம். அந்த வகையில் இந்த வாரமும் ஜெயிலரை எதிர்த்து படத்தை வெளியிட எந்த ஹீரோக்களும் தயாராக இல்லை.

Also read: இமையமலையிலிருந்து வந்த ஸ்பீடில் ரஜினி ஆரம்பிக்க போகும் தலைவர்-171.. ரிலீசுக்கு நாள் குறித்த லோகேஷ்

அது மட்டுமின்றி படத்தை வெளியிடுவதற்கு ஸ்கிரீன் கிடைக்காத நிலையும் இப்போது ஏற்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு உட்பட மற்ற மாநிலங்களில் இந்த வாரம் எந்த படங்களும் வெளிவருவது சந்தேகம் தான். அந்த வகையில் முத்துவேல் பாண்டியன் காட்டிய பயத்தால் பல ஹீரோக்களும் நடுநடுங்கி போய் பின்வாங்கி இருக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News