செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடுமா.? லெஜன்ட் அண்ணாச்சி காட்டிய பயம், குறுக்கு வழியில் நடக்கும் சதி

Saravana Stores Annachi: சரவணா ஸ்டோர்ஸ் என்னும் மிகப்பெரும் தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதி தான் அண்ணாச்சி என்று அழைக்கப்படும் அருள் சரவணன். தொழில்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவர் இப்போது சினிமா துறையிலும் கால் பதித்துள்ளார்.

ஆனால் இவர் சினிமாவுக்கு வரப் போகிறார் என்று தெரிந்த நாளிலிருந்தே பல விமர்சனங்கள் இவர் முன் வைக்கப்பட்டது. ஆனால் இது போன்ற எத்தனையோ விமர்சனங்களை நான் பார்த்து விட்டேன். என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என அண்ணாச்சி எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.

Also read: லெஜன்ட் சரவணா கூட நடித்தால் ஊரையே வளைத்து போடலாம்.. பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை

அதைத்தொடர்ந்து தற்போது அடுத்த படத்திற்கும் அவர் தயாராகி வருகிறார். இந்நிலையில் இவர் குறித்து தேவையில்லாத பல வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். அதாவது அண்ணாச்சியின் தொழில் சாம்ராஜ்யம் சரிந்து விட்டதாகவும், தேவையில்லாமல் படத்தை எடுத்து காசை வீணடித்து விட்டார் எனவும் சிலர் பொய்யான கதைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் சினிமா மோகத்தால் இவர் நடிகைகளுக்கு பல கோடிகளை சம்பளமாக கொடுத்து வருவதாகவும் கூட செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் இவருடைய அப்பா சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் படம் எடுக்கிறேன் என்ற பெயரில் காலி செய்து விட்டார். அதனால் இவருடைய சாம்ராஜ்யம் சரிந்து வருகிறது என பல்வேறு வதந்திகள் கிளம்புகிறது.

Also read: ஆசையை தூண்டி அண்ணாச்சியிடம் உருவிய 300 கோடி.. வாய் கூசாமல் அவிழ்த்து விட்ட பிரபலம்

உண்மையில் இது போன்ற செய்திகளுக்கு பின்னால் இருப்பது காழ்ப்புணர்ச்சி மட்டுமே. அதாவது தொழில்துறையில் நம்பர் 1 ஆக இருக்கும் அண்ணாச்சி சினிமாவிலும் தங்களை ஓரம் கட்டி விடுவாரோ என்ற பயத்தில் சில முக்கிய புள்ளிகள் யூடியூப் சேனல்களில் சிலரை வைத்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

ஆனால் இது போன்ற நெகட்டிவ் விமர்சனங்கள் எல்லாம் அண்ணாச்சியின் புகழை என்றுமே குறைக்கப் போவதில்லை. பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விடுமா என்ன. அப்படித்தான் அண்ணாச்சிக்கு எதிராக நடக்கும் சதியை பார்த்தால் சொல்லத் தோன்றுகிறது. இவ்வாறு குறுக்கு புத்தியில் சதி வேலைகளை செய்பவர்களுக்கு அண்ணாச்சி மீது ஒரு பயம் வந்துவிட்டதாக தான் இதையெல்லாம் பார்த்தால் நினைக்க தோன்றுகிறது.

Also read: சரியும் லெஜன்ட் அண்ணாச்சியின் சாம்ராஜ்யம்.. வதந்தியை கிளப்பி குளிர் காயும் பிரபலம்

Trending News