திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பெண் போட்டியாளர்.. நாளை மூட்டை முடிச்சு கட்டிட்டு போகும் மஞ்சரி

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டும் இருப்பதால் இந்த வாரமும் டபுள் எவிக்சன் பண்ணப்படுகிறது. அந்த வகையில் அதிகமான ஓட்டுக்களை பெற்றிருப்பது தீபக், ராணவ், அருண், ஜாக்லின். அத்துடன் கம்மியான ஓட்டுகளை பெற்றிருப்பது மஞ்சரி, விஷால், பவித்ரா. இதனால் யார் இந்த வாரம் வெளியே போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு பெண் போட்டியாளர்கள் போகப் போகிறார்கள்.

அந்த வகையில் இன்று முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நபர் யார் என்றால் பவித்ரா. எந்தவித நெகட்டிவ் கமெண்ட்ஸ்க்கும் பவித்ரா ஆளாகாமல், நல்ல பேரை சம்பாதித்துக் கொண்டு மக்களிடம் இவருக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார். ஆனாலும் ஓட்டு அடிப்படையின் படி கம்மியான ஓட்டுகளை பெற்றிருப்பதால் இன்று பவித்ரா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

அடுத்ததாக நாளை போகப்போகும் போட்டியாளர் யார் என்றால் பேச்சுத் திறமையால் ஜெயித்து விடலாம் என்று முத்துக்குமாரனை பார்த்து கனவுகோட்டை கட்டி வந்த மஞ்சரி தான். கம்மியான ஓட்டுக்களை பெற்றிருக்கும் இவர் நாளை பிக் பாஸ் வீட்டை விட்டு போகப் போகிறார். இதனை அடுத்து மீதம் இருக்கும் எட்டு போட்டியாளர்களில் நேரடியாக பைனலுக்கு போகும் வாய்ப்பை பெற்றவர் ரயான்.

அடுத்ததாக இருக்கும் போட்டியாளர்கள் முத்துக்குமார், சௌந்தர்யா, அருண், ஜாக்லின், விஷால், ராணவ் மற்றும் தீபக். இவர்களில் முத்துக்குமாருக்கு அதிகமான ஓட்டுகள் கிடைத்து வருவதால் டாப் 3 இடத்திற்கு போய்விடுவார். அடுத்ததாக ஜாக்லின் மற்றும் தீபக் போக வாய்ப்பு இருக்கிறது. கடைசியில் டிக்கெட் பின்னாலே டாஸ்கை வென்ற ரயான் மற்றும் முத்துக்குமார் மேடை ஏறப் போகிறார்கள்.

இதற்கிடையில் பணப்பெட்டி டாஸ்க் வரும் பொழுது விஷால் மற்றும் ராணவ் இவர்களில் யாராவது ஒருவர் அந்த பணத்தை எடுத்துட்டு போக வாய்ப்பு இருக்கிறது.

Trending News