Vidamuyarchi: விடாமுயற்சி படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஒருபுறம் படக்குழு விடாமுயற்சி படத்திற்காக நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இப்போது விடாமுயற்சி படத்தில் முரட்டு வில்லனை படக்குழு லாக் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
இப்போது டாப் நடிகர்களின் படங்களில் பாலிவுட்டில் இருந்து தான் வில்லன் நடிகர்களை பெரும்பாலும் நடிக்க வைக்கிறார்கள். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் விநாயகன் அருமையாக நடித்து ரசிகர்களை மிரள விட்டிருந்தார். இப்போது விநாயகனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
Also Read : விடாமுயற்சி போல் ஆகி விடக்கூடாது.. லைக்காவை யோசிக்க விடாமல் செய்யும் ரஜினி
அதேபோல் லியோ படத்திலும் எக்கச்சக்க நடிகர்கள் வில்லனாக நடித்து வருகிறார்கள். இதில் முக்கிய வில்லனாக நடிப்பவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். பல சர்ச்சைகளில் சிக்கி உள்ள இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் எல்லாமே மிகவும் வலுவானதாக இருக்கும். அந்த வகையில் லியோ படத்தில் இவரது கேரக்டர் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
இந்த சூழலில் விடாமுயற்சி படத்திலும் சஞ்சய் தத் அஜித்துக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம். விஜய் பட வில்லனை லைக்கா லாக் செய்து வைத்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் விடாமுயற்சி படத்திற்காக சஞ்சய் தத்திற்கு பெரிய தொகையை கொடுத்து தான் சம்மதம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : விஜய்யை பகைத்துக் கொண்ட லைக்கா.. 9 வருட பகையை முடிவுக்கு கொண்டு வந்த சுபாஸ்கரன்
அதன்படி முரட்டு ஆசாமியாக இருக்கும் சஞ்சய் தத்துக்கு கிட்டத்தட்ட 10 கோடி சம்பளம் விடாமுயற்சி படத்திற்கு பேசப்பட்டிருக்கிறது. மேலும் லியோ படம் வெளியானால் இவரது மார்க்கெட் இன்னும் உயரும் என கூறப்படுகிறது. லோகேஷ் மிக திறமையான இயக்குனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அந்த வகையில் சஞ்சய் தத்தை சரியாக பயன்படுத்தி இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் அடுத்ததாக சஞ்சய் தத் புதிய ட்ரெண்டை உருவாக்குவார் என்பதால் லைக்கா முன்கூட்டியே சீட்டை போட்டு லாக் செய்து விட்டது. மேலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதால் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
Also Read : ஆரம்பமே அமர்க்களப்படுத்திய ஜேசன் சஞ்சய்.. லைக்கா கூட்டணியின் பின்னணி காரணம்