வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

படமே ஓடாவிட்டாலும் சேட்டை மட்டும் குறைய மாட்டேங்குது.. அல்பத்தனமாய் நடந்து கொண்ட சிபிராஜ்

தமிழ்சினிமாவின் வாரிசு நடிகர்களாக நடிகர் விஜய், ஜீவா, தனுஷ், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் தங்களது அப்பாக்கள் இயக்குனர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும் , நடிகர்களாகவும் இருந்த நிலையில் சினிமாவில் நடிக்க வந்தனர். பல விமர்சனங்கள் அவர்கள் நடிக்கும் படங்களின் மேல் இருந்தாலும், இன்று அவர்களது தந்தைகளின் பெயரையும், புகழையும் காப்பாற்றி அவர்களுக்கென தனி இடத்தையும் ரசிகர்ளிடம் பிடித்துள்ளனர்.

இப்படிப்பட்ட வாரிசு நடிகர்களுக்கு என பல சலுகைகளும் இந்திய சினிமாவிலேயே உள்ளது. தொடர்ந்து அவர்களுக்கென பட வாய்ப்புகள் வருவது, சம்பள உயர்வு உள்ளிட்ட பலவற்றை அவர்களால் சுலபமாக அனுபவிக்க முடியும். இருந்தாலும் ஒரு சில வாரிசு நடிகர்கள் இந்த சலுகைகளை தவறாக பயன்படுத்தி, சினிமாவை விட்டே வாய்ப்பில்லாமல் போய்விடுவார்கள்.

Also Read : மகனை கேரியரில் தூக்கிவிட தயாரிப்பாளராக மாறிய சத்யராஜ்.. சிபிராஜ்க்கு வாரி இறைத்த 3 படங்கள்

அப்படிப்பட்ட நடிகர்களின் வரிசையில் ஒருவர் தான் பிரபல நடிகரான சத்யராஜின் மகன் சிபிராஜ். ஆரம்பக்கட்ட 2000 ஆம் ஆண்டுகளில் சில திரைப்படங்களில் நடித்து வந்தார். சிபிராஜின் நடிப்பு, அவர் தேர்ந்தெடுக்கும் கதை என எதுவும் ரசிகர்களுக்கு அந்த அளவிற்கு தற்போது வரை பரிச்சயமாக இல்லை. இருந்தாலும் எப்படியோ நடிகராக பேர் எடுக்க வேண்டும் என சில வருடங்களாக திரைப்படங்களில் அதிகமாக கமிட்டாகி நடித்து வருகிறார்.

ஆனால் இன்றுவரை நடிகர் சிபிராஜ் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த போதிலும் அவரது பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய திரைப்படங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் நாய்கள் ஜாக்கிரதை, கட்டப்பாவ காணோம் உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு கைகொடுத்தது. இதனிடையே இப்படி கைகொடுத்த திரைப்படங்களை வைத்து எப்படி மேலே வருவது என்று யோசிக்காத சிபிராஜ், சற்று திமிராக படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருவது தான் அனைவருக்கும் வேடிக்கையாக உள்ளது.

Also Read : சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போன 5 வாரிசு நடிகர்கள்.. மகன்களை கரை சேர்க்க தவறிய குரு, சிஷ்யன்

இந்த வருடம் சிபிராஜ் நடிப்பில் வெளியான ரங்கா திரைப்படத்தை இயக்குனர் வினோத் டி.எல். இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய அர்ஜுன் மணிமாறன் சிபிராஜின் நடிப்பில் மாயோன் என்ற திரைப்படத்தை இயக்கலாம் என முடிவு செய்து படப்பிடிப்பை நடத்தி வந்துள்ளார். படப்பிடிப்பின்போது சண்டை காட்சியில் சிபிராஜின் கையில் சிறு கீறல் விழுந்துள்ளது.

உடனே சிபிராஜ் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். டி.டி இன்ஜெக்சன் போட்டு இருப்பதாகவும் , படப்பிடிப்பை இரண்டு நாட்கள் நிறுத்தி வையுங்கள் என்று கூறியுள்ளார் சிபிராஜ். இதையறிந்த மாயோன் படக்குழு செம காண்டில் இருந்தார்களாம். ஒரு கீறலுக்கு இப்படியெல்லாம் சிபிராஜ் செய்து வருவது சற்றுகூட நியாயம் இல்லை என அவர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.

Also Read : ஜீவா வளர்ச்சியை கெடுத்த 5 படங்கள்.. அதல பாதாளத்திற்குச் சென்ற மார்க்கெட்

Trending News