திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வாரிசு நடிகரை அடியோடு வெறுக்கும் திரையுலகம்.. திருப்பி அடிக்க காத்திருக்கிறேன்

திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்களுக்குள் மறைமுகமாக ஒரு பனிப்போர் நடப்பது இயல்புதான். ஆனால் பிரபல நடிகரின் மகனாக வாரிசு நடிகர் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்குள் நுழைந்த ஒருவர் இன்றுவரை ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.

எத்தனையோ நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்து கடின உழைப்பை கொடுத்து நடித்தாலும் அவருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஆனால் அவர் எப்போதும் துவண்டு போனது கிடையாது. தன்னுடைய வெற்றிக்காக இன்னும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்.

Also read : அருண் விஜய்க்கு பதில் வில்லனாக களமிறங்கும் ஹீரோ.. சிரிப்பு மூட்டும் செட்டாகாத முகம்

அவர் வேறு யாரும் அல்ல நடிகர் அருண் விஜய் தான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த யானை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர் தற்போது ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அது குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் அவர் போட்டிருந்த பதிவு ஒன்று தற்போது பலரையும் குழப்பம் அடைய வைத்துள்ளது. அதில் அவர் மௌனம் தான் பெரிய பலத்தின் ஆதாரம் என்று குறிப்பிட்டுள்ளார். இதை மறைமுகமாக அவர் யாருக்கோ சொல்வது போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

Also read : ரீமேக் இயக்குனருடன் மாஸ் கூட்டணியில் அருண் விஜய்.. டைட்டிலுடன் வெளிவந்த வீடியோ!

ஏனென்றால் இவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் இன்னும் ரிலீசாகாமல் பல பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் திரையுலகில் இவரை ஒதுக்கி வருவதாகவும் சில தகவல்கள் பரவி வருகிறது. அதனால்தான் அவர் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார். இவருடைய அப்பா விஜயகுமார் பல வருடங்களாக சினிமா துறையில் வெற்றி நடிகராக வலம் வருகிறார்.

அப்படி இருந்தும் கூட இவருக்கு பெரிய அளவில் வெற்றி படங்கள் அமையவில்லை. அதனாலேயே அருண் விஜய் அடுத்த திரைப்படத்தின் மூலம் ஒரு தரமான வெற்றியை கொடுக்க முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் தன்னை ஒதுக்கிய திரையுலகத்திற்கு இவர் சரியான பதில் கொடுப்பதற்காக தான் இப்படி ஒரு பதிவு என்று அவரின் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also read : பிழைக்கத் தெரியாத மனிதரா இருக்காரே.. அருண் விஜய்யின் சினம் பட இயக்குனர் வியக்கவைத்த சம்பவம்

Trending News