திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படம்.. மணிரத்தினம், ஷங்கருக்கு எல்லாம் நான் குரு

மணிரத்தினம், ஷங்கர் போன்ற இயக்குனர்கள் தான் பிரம்மாண்ட படங்களை இயக்கி வருகிறார்கள். ஆனால் இவர்களையெல்லாம் விட இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்துள்ளார். அதாவது தமிழ் சினிமா இப்போது தான் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

இதில் பல புதிய தொழில்நுட்பங்களை கொண்டு படத்தை எடுத்து வருகிறார்கள். பெரும்பாலும் பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே நமக்கு சட்டென்று ஞாபகம் வருவது ஷங்கர் தான். சிவாஜி, எந்திரன், 2.o என மிகப்பெரிய பட்ஜெட் படங்களை கொடுத்துள்ளார்.

Also Read : அர்ஜுனை தூக்கி நிறுத்திய 5 வெற்றி படங்கள்.. கீழே விழும் நேரத்தில் தாங்கிப் பிடித்த ஷங்கர்

மேலும் மணிரத்தினமும் சமீபத்தில் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் 500 கோடி பட்ஜெட்டில் எடுத்திருந்தார். இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வசூல் சாதனை படைத்தது.

ஆனால் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றால் அது ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படம் தான். ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அலியா பட், அஜய் தேவகன் போன்ற பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

Also Read : அடுத்த 500 கோடி பட்ஜெட் படத்தை உறுதி செய்த ராஜமவுலி.. கதை எழுதுவது யார்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

ஆர்ஆர்ஆர் படத்தை கிட்டத்தட்ட 550 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். இந்த படம் மொத்தமாக 1200 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பினால் ராஜமவுலி ஆர்ஆர்ஆர் படத்தில் இரண்டாம் பாகத்தை விரைவில் எடுக்க உள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

மேலும் இந்த படத்திற்கான கதையை தனது தந்தை விஜேந்திர பிரசாந்த்தும் தானும் எழுதும் பணியில் இறங்கி உள்ளதாகவும் ராஜமவுலி கூறியிருந்தார். மிக விரைவில் ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : ராஜமவுலி கிட்ட நெருங்க கூட முடியாத சங்கர்.. இன்று வரை இருக்கும் பெரிய ஏக்கம்

Trending News