உலக அளவில் அறியப்பட்ட தமிழ் இயக்குனரான மணிரத்தினம் இன்று தமிழ் சினிமா தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர். தமிழ் சினிமாவை அடுத்த இடத்துக்கு கொண்டு சென்று கால் ஊறுவதற்கு காரணமாக இருந்தவர்களுள் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
80-களில் பிற்காலத்தில் மிகப்பெரும் இயக்குனர்களின் வரிசையில் கே பாலச்சந்தர், பாலுமகேந்திராவை தொடர்ந்து மணிரத்னம் தான் தத்ரூபமாக திரைப்படங்களை இயக்குவதில் கெட்டிக்காரர். அதிலும் இவருடைய படங்களில் காதல், தீவிரவாதம் முதலியவற்றை நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் பின்னணிகளை கொண்டே தன்னுடைய படத்தை இயக்குவார்.
யாரிடமும் இதுவரை உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக தன்னுடைய முதல் படத்தை 1983 ஆம் ஆண்டு ‘பல்லவி அனுபல்லவி’ என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதைத் தொடர்ந்து அதே ஆண்டு மௌனராகம், 1986 ஆம் ஆண்டு உலக நாயகன் கமலஹாசனை வைத்து ‘நாயகன்’, 1992-ல் அரவிந்த் சாமி நடிப்பில் ரோஜா, 1995 ஆம் ஆண்டு பம்பாய், 1998-ல் உயிரே போன்ற படங்களால் மிகப்பெரியளவில் பெயர் எடுத்தார்.
ஆனால் இன்றுவரை சினிமாவில் அவரை இயக்குனராக அடையாளம் காட்டிய படம் ரோஜா. இப்படத்தில் தான் மணிரத்னத்தால் அறிமுகமாகினார் ஏ ஆர் ரகுமான். முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்து ரகுமானை உச்சத்தை தொடவைத்தது. இந்த படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைத்த ஆறு பாடல்களும் இன்றும் ரசிகர்களை ரிப்பீட் மோடில் கேட்க வைத்துக்கொண்டிருக்கிறது.
இதன்பின் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார் மணிரத்னம். அந்த சமயம் டைம் வார இதழில் ரோஜா படத்தில் இடம் பெற்ற பாடல்கள் தான் உலகின் சிறந்த திரைப்பட பாடல்கள் என்று ரோஜா திரைப்படம் 2005 ஆம் ஆண்டு சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.
ரோஜா படத்தில் மனதை வருடும் பாடல்களை இசை அமைத்த ஏஆர் ரகுமானின் பாடல்களுக்கு கவிஞர் வைரமுத்து பாடல்களுக்கான வரிகளை எழுதினார். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா இருவரும் தங்களுக்குரிய நடிப்பைக் காட்டி மிரட்டி இருப்பார்கள்.