புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தலைவராலேயே முடியாதுன்னு சொன்ன படம்.. கொளுத்தி போடும் லியோ கதை

விறுவிறுப்பாக விஜய்யின் நடிப்பில் வர இருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பினை மேற்கொண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்கான எதிர்பார்ப்பு இப்போது அதிகமாக இருக்கிறது. இச்சூழலில் இவரின் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்களில் பிஸியாக இருந்து வருகிறார் ரஜினி. இதைத்தொடர்ந்து இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக இவரின் செயல்பாடு பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்து வருகிறார் தலைவர்.

Also Read: வாட்சினால் உருவான நாயகன் கதை.. கமல் விளையாட்டாய் செய்து விஸ்வரூபம் கண்ட படம்

என்னவென்றால் கமலின் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தின் விமர்சனங்களை பார்த்துவிட்டு லோகேஷை தன் படத்தை இயக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். மேலும் தன்னுடைய கடைசி படம் இது போன்று இருக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். மேலும் தன் நடிப்பில் வந்த பாட்ஷாவின் கதை அம்சம் போல் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு இருக்கையில் முன்பொரு காலகட்டத்தில் ரஜினி தன் வாய்பட பாட்ஷா படம் போல் இனி எந்த படமும் அமையாது என்று கூறியிருந்தார். ஆனால் அவரே இப்போது அப்படி ஒரு கதையம்சம் வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். இந்த சூழ்நிலையில் லியோ படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பாட்ஷா பட பாணியில் பதுங்கி வாழும் கதாபாத்திரமாக லோகேஷ் தயாரித்து வருகிறார்.

Also Read: ரஜினியை திமிரில் திட்டிய வடிவுக்கரசி.. தண்டவாளத்தில் தலையை வைத்து விட்ட சம்பவம்.!

மேலும் இப்படத்தில் விஜய் இரு வேடங்களில் லியோவாகவும், பார்த்திபனாகவும் பெயர் மாற்றங்களோடு பதுங்கி பாயும் புலியாக நடித்திருக்கிறார். இதை பார்க்கையில் தலைவர் தன் படத்திற்கு கூறியதை லோகேஷ் லியோ படத்தில் எடுத்து வருவது எரிகிற நெருப்பில் எண்ணெய் விடுவது போல இருந்து வருகிறது.

இவ்வாறாக லோகேஷின் இத்தகைய செயல்களை சற்றும் எதிர்பார்க்காத ரஜினி ரசிகர்கள் ஆத்திரத்தில் இருந்து வருகிறார்கள். அதைத்தொடர்ந்து இத்தகைய சம்பவத்தை எவ்வாறு லோகேஷ் சரி செய்வார் என்பதையும் மற்றும் தலைவரின் படத்தை எவ்வாறு இயக்குவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: லோகேஷை கைக்குள் போட்டுக்கொண்ட சன் பிக்சர்ஸ்.. லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுத்து வளைத்து போட இப்படி ஒரு திட்டமா? 

Trending News