வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

9 கோடி வாங்கி ஏமாற்றிய விஜய் வில்லன்.. டேக் ஆப் ஆன உடனே அதல பாதாளத்திற்கு சென்ற படம்

Vijay :  விஜய்யும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். கன்னட மொழி திரைப்படங்களில் பல ஹிட்டுகளை கொடுத்துள்ள இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகின்றார்.

இவர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பின்னணி பாடகராகவும் பன்முக கலைஞராக வளம் வருகிறார். தற்பொழுது அதிக பொருட்செலவில் உருவாகி வரும் கப்ஸா 2 என்ற படத்தில் நடித்து வருகின்றார். நான் ஈ, பாகுபலி போன்ற படங்களில் நடித்த பிரபலமானவர் நடிகர் சுதீப். இவர் புலி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பார்.

Also Read : ரசிகர்களால் பிரச்சினையில் சிக்கிய கிச்சா சுதீப்.. வழக்கு பதிவு செய்த போலீசார்

இதற்கிடையே தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இவர் ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கின்றார். இந்த வேலையில் கிச்சா சுதிப்பை வைத்து ஒரு படம் எடுக்கப் போவதாக ஆச்சரியப்படும் அறிவிப்பை அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் எம். என். குமார் என்பவர் தனது தயாரிப்பில் படம் நடிப்பதாக 9 கோடி பணம் வாங்கிக் கொண்டு இதுவரை கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டு நடிக்க மறுக்கிறார் என நடிகர் சுதிப் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

Also Read : விஜய்யின் தோல்வி படத்துக்கு காரணம் ரஜினி தான்.. மனம் திறந்து பேசிய கலைப்புலி எஸ் தாணு

இந்நிலையில் சுதிப் தனது புகழுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் எம்.என்.குமார் கூறி வருகிறார் என மான நஷ்ட வழக்கு ஒன்றை பதிவிட்டுடிருக்கிறார். இவ்வாறு இந்த பிரச்சினையில் சிக்கிக் கொண்டு நடிகர் சுதிபை கலைப்புலி எஸ். தாணு படத்தில் நடிக்க விடாமல் செய்துவிட்டனர். இப்பொழுது இப்படம் டேக் ஆஃப் ஆன உடனேயே அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.

Also Read : தேவையில்லாத பிரச்சனையை கிளப்பி வெற்றிமாறனை சிக்க வைத்த தாணு..ரெட் கார்டு வரை சென்ற சம்பவம்

Trending News