திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அப்பாவை சந்தோஷப்படுத்திய மகன்.. மனதை கனக்க வைத்த மனோபாலாவின் இறுதி நிமிடங்கள்

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பம்பரமாக சுற்றி வந்த மனோபாலா கடந்த மூன்றாம் தேதி உடல் நலக்குறைவின் காரணமாக உயிர் நீத்தார். பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வினை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களும் அவருடைய உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து அவருடைய நினைவுகளை பலரும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் மனோபாலாவின் இறுதி நிமிடங்கள் எப்படி இருந்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் தற்போது அவர் தன் குடும்பத்தினருடன் இருக்கும் கடைசி வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Also read: முட்டாள், தண்டம், ஈன புத்தி எல்லாம் சேர்ந்த ஒரு கலவை தான் இளையராஜா.. மறுபடியும் சண்டைக்கு இழுக்கும் பிரபலம்

அதில் மனோபாலா உடல் நலம் குன்றிய நிலையில் இருக்கிறார். அவருடைய கையை ஆதரவாக பிடித்திருக்கும் அவருடைய மகன் ஹரிஷ் அவரிடம் பேசியபடி அமர்ந்திருக்கிறார். மேலும் உங்களுக்கு பிடித்த பாடலை பாடட்டுமா என்று கேட்கும் அவர் ஒரு பாடலையும் தன் அப்பாவுக்காக பாடுகிறார்.

அதைக் கேட்ட மனோபாலா கண்கலங்கிய படி அமர்ந்திருக்கிறார். மேலும் அவருடைய உதவியாளர் அவரை குதூகலப்படுத்தும் விதமாக பேசிக் கொண்டே உணவு ஊட்டுவது, தண்ணீர் கொடுப்பது என்று அவரை குழந்தை போல கவனிக்கிறார். அதைத்தொடர்ந்து அனைவரும் அவரிடம் உற்சாகமாக பேசி அவரை மகிழ்விக்க முயற்சிக்கின்றனர்.

Also read: மனோபாலாவை பற்றி இளையராஜா சொன்னதெல்லாம் சுத்த பொய்.. முகத்திரையை கிழித்த பிரபலம்

ஆனாலும் மனோபாலா எதுவும் பேசாமல் இறுக்கமான முகத்துடன் இருக்கிறார். இதிலிருந்தே அவர் உடல் நல பாதிப்பால் மிகவும் சிரமத்துடன் இருக்கிறார் என்பது பார்ப்பவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. ஏற்கனவே அவருடைய உதவியாளர் மனோபாலாவின் கடைசி நாட்களை பற்றி கூறியிருந்தார்.

அதில் அவர் சில சமயங்களில் பார்ப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் சிரமப்பட்டதாகவும், சில சமயங்களில் கோபப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதுவே பலரையும் கண்கலங்க வைத்தது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த வீடியோ காட்சிகள் பலரின் மனதையும் கனக்க வைத்திருக்கிறது.

Also read: மனோபாலாவின் குருநாதரை பற்றி பேசிய நெகிழ்வான தருணம்.. இந்த இயக்குனர் இல்லைன்னா இவர் இல்லை

Trending News