சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் புத்தாண்டு அன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஒரு நடிகராக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் படத்தை தயாரிப்பதாக இறங்கி கடனில் அவதிப்பட்டு வந்தார்.
ஆனால் டாக்டர், டான் என அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்களால் ஓரளவு கடனை சரிகட்டி உள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருந்தது.
Also Read : செஞ்ச தப்புக்கு பரிகாரம் செய்யும் சிவகார்த்திகேயன்.. நடிப்பை தாண்டி ரஜினியை ஃபாலோ செய்யும் மாஸ்டர் மைண்ட்
இந்த படத்தை பைனான்சியர் அன்பு செழியன் தான் வாங்கி இருந்தார். இந்த படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷனில் சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசி இருந்தார். அதாவது சிவகார்த்திகேயன் மிக குறுகிய காலத்திலேயே இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்துள்ளார்.
அதாவது ரஜினி, விஜய் அடுத்து சிவகார்த்திகேயன் தான் மாஸ் ஹீரோவாக வலம் வர போகிறார் என்று அன்பு செழியன் புகழ்ந்து பேசி இருந்தார். இந்த புகழ்ச்சி தான் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பிரின்ஸ் படத்திற்கு கடுமையான எதிர்ப்பு நிலவியது.
Also Read : ரஜினி உதாசீனப்படுத்திய இயக்குனர்.. ஆறுதல் கூறி அரவணைத்த சிவகார்த்திகேயன்
மேலும் இப்படம் 12 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. ஆகையால் அந்த 12 கோடியை கேட்டு அன்பு செழியன் சிவகார்த்திகேயனை டார்ச்சர் செய்துள்ளார். அதன் பின்பு வேறு வழி இல்லாமல் சிவக்கார்த்திகேயன் மற்றும் பிரின்ஸ் பட தயாரிப்பாளர் நேற்று 100 கோடியை அன்புச் செழியனுக்கு திருப்பிக் கொடுத்துள்ளனர்.
தேவையில்லாமல் சிவகார்த்திகேயனை புகழ்ந்து அவரை பெரிய வலையில் சிக்க வைத்து கடைசியில் டார்ச்சரும் செய்து பணத்தை வாங்கி உள்ளார். சும்மா இருந்தவரை உசுப்பேத்தி ரணகளம் ஆக்கி இவ்வாறு சிக்கலில் மாட்டி இருந்தார். அன்புச்செழியன் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் தவறு என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Also Read : கடனில் இருந்தாலும் கடவுள் போல் காப்பாற்றும் சிவகார்த்திகேயன்.. பிரின்ஸ் பட தோல்விக்கு இத்தனை கோடி உதவியா.?