முதல் முறையாக கோடியில் வசூல் சாதனை படைத்த 2 படங்கள்.. எம்.ஜி.ஆர், சிவாஜியை போற்றும் திரை உலகம்.!

தமிழ் சினிமாவின் அடித்தட்டு மக்களின் நாயகர்களாக விளங்கியவர்கள் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் அவர்கள். நடிப்பையும் தாண்டி மக்கள் இவர்களை இன்று வரை அவர்களின் மறைவிற்குப் பின்பும் மக்கள் நேசிக்கிறார்கள்.அந்த அளவிற்கு இவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் எதார்த்தமான நடிப்பிருக்கும். அப்படிப்பட்ட இவர்கள் இருவரின் திரைப்படங்களும் 70 காலங்களிலேயே முதன்முதலாக தமிழ் சினிமாவில் பல கோடி ரூபாய் வசூல் செய்தது. அந்த இரண்டு திரைப்படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

உலகம் சுற்றும் வாலிபன்: 1973ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், இயக்கி,தயாரித்து,நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் நடிகைகள் லதா,மஞ்சுளா,சந்திரகலா உள்ளிட்டோர் நடித்திருப்பர். இத்திரைப்படம் தமிழ்நாட்டையும் தாண்டி ஸ்ரீலங்காவிலும் திரையிடப்பட்டது.சென்னையிலும், ஸ்ரீலங்காவிலும் மட்டுமே இத்திரைப்படம் கிட்டத்தட்ட 175 நாட்கள் ஓடி முதன் முதலாக சாதனை படைத்தது.

Also Read:தவறான பழக்கம் இருந்தும், தன்னடக்கமாக இருந்த சிவாஜி.. படப்பிடிப்பில் பூரித்துப் போன எம்ஜிஆர்

சிங்கப்பூர்,ஹாங்காங் என மூன்று வருடங்கள் இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் எடுக்கப்பட்டது. வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் பெற்றிருந்தது. இத்திரைப்படத்தின் ஒரு வார கால வசூல் மட்டுமே அன்றைய காலகட்டத்தில் 1 கோடியாக அமைந்தது. இதுவே தமிழ் சினிமாவின் முதல் 1 கோடி ரூபாய் வசூலை குவித்த திரைப்படமாகும்.

திரிசூலம்: 1979ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரிசூலம் திரைப்படத்தை இயக்குனர் விஜயன் இயக்கியிருந்தார். கன்னட திரைப்படமான சங்கர் குரு என்ற திரைப்படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட திரிசூலம் திரைப்படத்தின் டிக்கெட் மட்டுமே 30 லட்சம் டிக்கெட் விற்கப்பட்டது.

Also Read:சம்பளமே வாங்காமல் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள்.. சிவாஜிக்காக பண்ணிய பெரிய தியாகம்

தொடர்ந்து 200 நாட்களுக்கு மேல் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு ஓடிய நிலையில், கிட்டத்தட்ட 3 கோடிக்கு மேல் வசூலை அள்ளிக் குவித்து அதுவரை தமிழ்சினிமாவின் சாதனையை முறியடித்து வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் படைத்த திரைப்படங்களாக பார்க்கப்படுகிறது.

அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற பெரிய ஜாம்பவான்கள் செய்த சாதனை அவர்கள் மறைவிற்கு பிறகும் இன்றும் தமிழ் சினிமாவின் முதல் சாதனை அதுவும் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இது என்றும் மாறாதது இவர்களின் பெருமை.

Also Read:ஒரே ரூமில் ட்ரீட்மென்ட் பார்த்த எம்ஜிஆர், MR ராதா.. துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி விளக்கிய ராதாரவி

Next Story

- Advertisement -