வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கையில் வாளுடன் வேட்டையாட தயாரான சூர்யா.. வைரலாகும் கங்குவா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Kanguva First Look Poster: இன்று காலை தொடங்கிய சூர்யாவின் கங்குவா படத்தை பற்றிய பேச்சு தான் எங்கு பார்த்தாலும் சென்று கொண்டிருக்கிறது. சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சரியாக 12 மணிக்கு கங்குவா படக்குழு இப்படத்தின் கிளிமஸ் வீடியோவை வெளியிட்டது. ரசிகர்கள் முதல் ஒட்டுமொத்த திரையுலகமும் அரண்டு போய்விட்டது.

அதாவது அந்த வீடியோவில் சூர்யா நலமா என்று கேட்ட ஒத்த வார்த்தை இப்போது வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் இப்படம் உருவாகி வரும் நிலையில் 7 கிரீன் ஸ்டுடியோ இப்படத்தை தயாரித்து வருகிறது. சூர்யா ரசிகர்கள் சிங்கம் போல ஒரு மாபெரும் வெற்றியை மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

Also Read : சூர்யாவின் பிறந்த நாளை தடபுடலாக கொண்டாட நினைத்ததால் ஏற்பட்ட விபரீதம்.. நெஞ்சை பதைபதைக்க வைத்த சம்பவம்

ஆனால் சூர்யாவுக்கு அடுத்தடுத்து ஏதோ ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. வணங்கான் படம் அவருக்கு மிகப்பெரிய அடியாக விழுந்தது. அதிலிருந்து சரியான கம்பேக் கொடுக்கும் படியாக கங்குவா படமாக அமைந்திருக்கிறது என்பது கிளிம்ஸ் வீடியோ மூலமாகவே தெரிகிறது. மேலும் படக்குழு அடுத்த ட்ரீட்டையும் இன்றே கொடுத்திருக்கிறது.

அதாவது இன்று மாலை 5 மணிக்கு கங்குவா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் குதிரை மீது கையில் வாளுடன் போருக்கு கிளம்புவது போல் ஒரு கெத்தான போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இதைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Also Read : லியோவுக்கு ஜெயிலர் கொடுத்த அதிர்ச்சியே இன்னும் குறையல.. சூடு ஆறும் முன் போட்டிக்கு வந்த சூர்யா

மேலும் விரைவில் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு கங்குவா படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் அந்த அளவுக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது கங்குவா படம்.

kanguva-first-look-poster
kanguva-first-look-poster

Trending News