Vanangaan-Arunvijay: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் படம் உருவாகி வருகிறது. ரோகினி பிரகாஷ், மிஷ்கின் போன்ற பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் வணங்கான் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது.
எப்போதுமே பாலா வித்யாசமான கதை களத்தைக் கொண்டுதான் படங்களை எடுத்து வருவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஹீரோவை ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றி விடுவார். இப்போது வெளியாகியிருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அப்படிதான் உள்ளது.
அருண் விஜய் பெரும்பாலும் ஹாண்ட்சம் ஹீரோ சப்ஜெக்ட்டில் தான் நடித்து வந்தார். இப்போது வணங்கான் படத்தில் சேரும் சகதியுமாய் இது அருண் விஜய்யா என்று அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார். அதேபோல் நீண்ட மூடி, தாடி ஆகியவற்றுடன் இருக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் அருண் விஜய்யின் ஒரு கையில் பெரியார் சிலை, மற்றொரு கையில் பிள்ளையார் சிலை இருக்கிறது. அதாவது மூடநம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை ஆகியவற்றை வெறுக்கும் பெரியார் ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் முழுமுதற் கடவுளாக பார்க்கும் விநாயகர் இருக்கிறார்.
Also Read : இந்த 6 சினிமா பிரபலங்களுக்கு இடையே இப்படி ஒரு உறவா.? அருண் விஜய்க்கு தம்பி முறையாகவும் சஞ்சீவ்
ஏற்கனவே வணங்கான் படம் கடல் சம்பந்தமான கதைகளை கொண்ட படமாக இருக்கும் என்ற தகவல் வெளியானது. ஆனால் இப்போது வணங்கான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் இது வேறு கதையை நோக்கி பயணிப்பதாக தெரிகிறது. ஆகையால் இப்போது வணங்கான் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.
வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
