தேசிய விருது வாங்க வேண்டும் என்பது சினிமாவில் நடிக்கும் அத்தனை நட்சத்திரங்களுக்கும் ஒரு பெரிய கனவாக இருக்கும். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த இந்த விருதை பல நட்சத்திரங்கள் திறமையால் வாங்கி இருந்தாலும் முதன் முதலாக இந்த விருதை வாங்கிய படம் என்னவென்று பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
அந்த வகையில் 1954 ஆம் ஆண்டு தான் முதல் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அந்த விருதை வாங்கி தமிழ் சினிமாவுக்கு பெருமையை தேடி கொடுத்த திரைப்படம் தான் மலைக்கள்ளன். ஸ்ரீ ராமலு நாயுடு இயக்கத்தில் எம்ஜிஆர், பானுமதி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
Also read: மொத்தமாக எம்ஜிஆர் நடித்த இரட்டைவேட படங்கள்.. டபுள் ஆக்ட் படத்தால் சிவாஜியை சரித்த புரட்சித்தலைவர்
கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் படத்தில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு காட்சிகளும் மக்களால் கொண்டாடப்பட்டது. அது மட்டுமல்லாமல் அந்த வருடத்தில் அதிகபட்ச வசூலை வாரி குவித்த படமாகவும் இது இருந்தது. அந்த வகையில் இந்த திரைப்படம் அந்த காலத்திலேயே 90 லட்சம் வரை வசூல் சாதனை படைத்தது.
மேலும் இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 140 நாட்கள் வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி இருக்கிறது. அந்த அளவுக்கு ரசிகர்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்தனர். மலை கிராமத்தில் நடக்கும் சில அசம்பாவிதங்களால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் நடித்திருப்பார்.
Also read: வாய்ப்புக்காக பொய் சொன்ன எம்ஜிஆர்.. சட்டையை பிடித்து சண்டை போட்ட இயக்குனர்
அந்த வகையில் அவர் இந்த படத்தில் மலைக்கள்ளன், அப்துல் ரஹீம், குமார வீரன் ஆகிய மூன்று கெட்டப்புகளில் வருவார். எம்ஜிஆர் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படங்களில் இந்த படமும் ஒன்று. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த திரைப்படம் மற்றொரு சாதனையும் படைத்திருக்கிறது.
அதாவது மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ஒரு தமிழ் படம் இத்தனை மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது அதுவே முதல் முறை. அந்த வகையில் இப்போது நம் தமிழ் சினிமா எத்தனையோ தேசிய விருதுகளை வாங்கி குவித்து இருந்தாலும் இந்த திரைப்படம் தான் அனைத்திற்கும் முன்னோடியாக இருக்கிறது.
Also read: சக்சஸ் மீட் கொண்டாடிய முதல் தமிழ் படம்.. 60களிலேயே ஆரம்பித்து வைத்த எம்ஜிஆர்