செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கண்ணமாவை அடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விவாகரத்து நடிகை.. வைரலாகும் புகைப்பட ஆதாரம்

வரும் அக்டோபர் 2ம் தேதி 17 முதல் 20 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் துவங்க இருப்பதால், அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை குறித்த தகவலும் இணையத்தில் வைரலாக பரவுகிறது. இந்த முறை பிக் பாஸ் சீசன் 6ல் பொதுமக்களும் கலந்து கொள்வதால் 2 போட்டியாளர்கள் சாதாரணமானவர்களாக மக்களின் சார்பாக முதன்முதலாக கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவியின் பிரபலங்கள் 2 பேர் பிக்பாஸ் சீசன் 6 வீட்டில் முதல் ஆளாக நுழைந்த சோபாவில் அமர்ந்தபடி மைக்கில் அவர்கள் பெயர் எழுதி பக்கா பிக்பாஸ் போட்டியாளர்களாகவே பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவுகிறது.

Also Read: பிக் பாஸ் சீசன் 6 உறுதியான 11 போட்டியாளர்கள்.. ஏஜெண்ட் விக்ரமுக்கு இவ்வளோ கோடி சம்பளமா?

இவர்கள் இருவரும் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நபர்கள். பல வருடங்களாக விஜய் டிவியின் அடையாளமாக இருக்கும் பிரபல முன்னணி பெண் தொகுப்பாளினியான டிடி என்கின்ற திவ்யதர்ஷினி தான் அதில் ஒருவர். காதல் திருமணம் செய்துகொண்ட டிடி அதன் பிறகு விவாகரத்து செய்து கொண்டு, தற்போது முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்

மற்றொருவர் பாரதிகண்ணம்மா சீரியலின் கதாநாயகி கண்ணம்மா கதாபாத்திரத்தில் முன்பு நடித்த சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இருவரது புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இந்த புகைப்படத்தின் மூலம் அது உறுதியாக இருக்கிறது.

Also Read: இணையத்தில் கசிந்த பிக்பாஸ் நடிகையின் பலான வீடியோ.. விளக்கத்தைக் கேட்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்

எப்போதுமே விஜய் டிவியில் இருக்கும் பிரபலங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னுரிமை கொடுப்பது வழக்கம் தான். அப்படி ஒவ்வொரு முறையும் தொகுப்பாளர்கள் சீரியல் நடிகைகளும் இடம்பெறுவார்கள்.

இந்த முறை அவர்களது சார்பாக டிடி மற்றும் ரோஷினி ஹரிப்ரியன் இருவரும் கலந்து கொண்டு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் சுவாரசியத்தை ஏற்படுத்தப் போகின்றனர். கூடிய விரைவில் மொத்த போட்டியாளர்களில் எல்லா விவரமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

bb6-contestants-cinemapettai
bb6-contestants-cinemapettai

Also Read: பிக்பாஸில் களமிறங்கும் 2 கவர்ச்சி நடிகைகள்.. டிஆர்பி-க்கு பலே திட்டம் போட்டு இருக்கும் விஜய் டிவி

Trending News