செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

முதன்முதலாக தமிழ் சினிமாவில் பிரமோஷன் செய்யப்பட்ட ரஜினி படம்.. பின் செய்த பிரம்மாண்ட சாதனை

தற்போதைய தமிழ் சினிமாவில் ஒரு படத்தை பிரம்மாண்டமாக பிரமோஷன் செய்தால்தான் கல்லா கட்ட முடியும் என்ற சூழல் இருக்கிறது. அந்த வகையில் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்கள் முதல் சிறு பட்ஜெட் படங்கள் வரை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பிரமோஷன் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் சில காலங்களுக்கு முன்பு வரை இப்படி எல்லாம் படங்களை புரமோஷன் செய்தது கிடையாது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ப்ரமோஷன் செய்யப்பட்ட ரஜினியின் படம் பற்றி பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அந்தப் பிரமோஷன் தான் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கும் காரணமாக இருந்திருக்கிறது.

Also read:திடுதிப்புன்னு உள்ளே புகுந்த ரஜினி.. காட்டிய மின்னல் மேஜிக்கில் அரண்டு போன படக்குழு

1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் எஜமான். ரஜினிகாந்த், மீனா, நெப்போலியன், நம்பியார், மனோரமா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.

அதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மீனா அப்போதுதான் ராஜ்கிரணுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ரஜினியுடன் அவர் சேர்ந்து நடிக்கும் செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனென்றால் அவர் ரஜினிக்கு மகளாக ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Also read:தம்பிகளுக்காக ஹீரோ தியாகம் செய்து நடித்த 5 படங்கள்.. சென்டிமென்டில் அசத்திய ரஜினி

மேலும் அந்த காலகட்டத்தில் கிராமத்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ரசிகர்கள் இந்த திரைப்படத்தை திருவிழா போல் கொண்டாடினர். இதற்கு ஏவிஎம் செய்த ஒரு பிரமோஷனும் காரணம். அது என்னவென்றால் இந்த படம் வெளியான சமயத்தில் ரஜினியின் ரசிகை ஒருவர் ஏவிஎம் நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர் வானவராயன் கதாபாத்திரம் மற்றும் உண்மையாக இருந்திருந்தால் நான் அவரை திருமணம் செய்திருப்பேன் என்று கூறியிருந்தார்.

இதைப் பார்த்த ஏவிஎம் நிறுவனம் தன்னுடைய மேனேஜரை அந்த ரசிகையின் வீட்டுக்கே அனுப்பியது. அங்கு சென்ற அவர் அந்த கடிதத்தை பத்திரிக்கையில் வெளியிட அனுமதியும் பெற்றிருக்கிறார். அதன் பிறகு அந்த கடிதம் பிரபல நாளிதழில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது. இப்படித்தான் தமிழ் சினிமாவில் ப்ரோமோஷன் தொடங்கப்பட்டது.

Also read:300 படங்களில் நடித்தும் ஏவிஎம் நிறுவனத்தை வெறுத்த ஜாம்பவான்.. கற்பூர புத்தியுடன் செயல் பட்ட சிவாஜி

Trending News