
Ajith : இந்த வருடம் தொடக்கத்தில் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியானது. கடந்த மூன்று வருடங்களாக அஜித்தின் படங்கள் வெளியாகாத நிலையில் விடாமுயற்சியை ரசிகர்கள் கொண்டாட நினைத்திருந்தனர்.
ஆனால் அதற்கு நேர் எதிராக இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது. இதை அடுத்து அஜித் ரசிகர்கள் நம்பியிருக்கும் படம் தான் குட் பேட் அக்லி. இந்தப் படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
மேலும் மேக்கிங் வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டானது. இந்த சூழலில் படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் தான் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம் வந்திருக்கிறது.
குட் பேட் அக்லி படம் குறித்து வந்த முதல் விமர்சனம்
திருச்சி ஸ்ரீதர் இப்படம் குறித்து பேசி உள்ள வீடியோ தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. அதாவது குட் பேட் அக்லி படம் சென்சருக்கு அனுப்பப்பட்டிருந்தது. அப்போது ஸ்ரீதரின் நண்பர் மலேசியாவில் உள்ள ஒருவர் இப்படத்தை பார்த்திருக்கிறார்.
அதில் அஜித்-க்கு மாஸ் ஹிட் படங்கள் கொடுத்த தீனா, சிட்டிசன், பில்லா, மங்காத்தா போன்ற ஒட்டு மொத்த படங்களின் கலவையாக குட் பேட் அக்லி உருவாகி இருப்பதாக கூறினாராம்.
அதோடு ரசிகர்கள் கொண்டாடும்படியாக இந்த படம் இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். இதை ஸ்ரீதர் கூறுகையில் படம் மாஸ் ஹிட், வசூல் சாதனை படைக்கும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இதில் அஜித் அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் செய்தி அண்மையில் வெளியாகி இருந்தது. இதில் மொத்த படங்களின் கலவையாக இருந்தால் படம் எப்படி இருக்குமோ, என்ன இப்படி சொல்லிட்டாங்க என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.