சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

நயன்தாரா புருஷன் நடித்த முதல் படம்.. ஆள் அடையாளமே தெரியாத புகைப்படம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது பிரபல நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீப காலமாக இவர்கள் எங்கு சென்றாலும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல 2 காதல் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார்.

இப்படத்தில் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் இவர்கள் இருவருக்குள் காதல் மலர்ந்துள்ளது. அந்த காதல் தற்போது திருமணத்தில் இணைந்துள்ளது. இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பற்றிய செய்திகள் அதிகமாக இணையத்தில் வெளியாகி வருகிறது.

சமீபத்தில் இவர்கள் இருவரின் சொத்து மதிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் முதல் முறையாக நடித்த படத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல 2 காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்நிலையில் போடா போடி படத்திற்கு முன்பே விக்னேஷ் சிவன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

அதாவது 2007 ஆம் ஆண்டு திகில் படமாக வெளியான சிவி படத்தில் கதாநாயகன் கிருஷ்ணனின் நண்பனாக விக்னேஷ் சிவன் நடித்திருந்தார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் போடா போடி படத்தில் விக்னேஷ் சிவன் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார்.

vignesh shivan first movie

அதேபோல் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே விக்னேஷ் சிவன் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு நடிப்பதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார். மேலும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து படங்களை இயக்குவதில் தான் கவனம் செலுத்தி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News