திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தமிழில் முதன்முதலாக தண்ணீரின் அடியில் எடுத்த திரைப்படம்.. இதிலும் கொடிகட்டிப் பறக்க செய்த மணிரத்னம்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற இயக்குனர் மணிரத்னம், தன்னுடைய படங்களில் தனித்துவத்தைக் காட்டுவது மட்டுமில்லாமல், தற்போது முதல் முதலாக தண்ணீருக்கடியில் சூட்டிங் எடுத்த பெருமையும் பெற்றிருக்கிறார்.

இவர் விஜயகாந்தை வைத்து எடுத்த சூப்பர் ஹிட் படம் ஒன்றில் தண்ணீருக்கு அடியில் எடுக்கும் காட்சியை தத்ரூபமாக எடுத்துள்ளார். 1990ல் மணிரத்னம் தயாரிப்பில் கே சுபாஷ் இயக்கிய சத்ரியன் படத்தில் பாடல் காட்சி ஒன்றில் இவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது.

Also Read: ஹிட்டடித்த மணிரத்னத்தின் 5 திரைப்படங்கள்.. அனைத்து பாடல்களையும் எழுதிய ஒரே பிரபலம்

இவ்வாறு ரசிகர்களை வியக்க வைக்கும் அளவுக்கு சத்திரியன் படத்தின் மூலம் தண்ணீருக்கு அடியிலும் படத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்தக் காட்சியில் விஜயகாந்துக்கு ஜோடியாக அந்தப் படத்தில் நடித்த பானு பிரியா நடித்திருப்பார்.

இந்தப் படம் 1990-களில் வெளியான படங்களில் சூப்பர் ஹிட் அடித்த படங்களின் வரிசையில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் விஜயகாந்த், பன்னீர்செல்வம் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். இந்தப் படத்தின் மூலம் விஜயகாந்த்திற்கும் நல்ல பெயர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: பொன்னியின் செல்வனுக்கு மணிரத்னம் போட்ட அதிரடி கண்டிஷன்.. அவர் படத்துக்கு மட்டும் இப்படி செய்வது நியாயமா?

இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் தண்ணீருக்கு அடியில் ரொமான்ஸ், சண்டை மற்றும் கிளைமாக்ஸ் போன்ற முக்கியம் காட்சிகள் எடுக்கப்பட்டாலும், சத்ரியன் படம் தான் மற்ற படங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்திருக்கிறது.  அனைத்திலும் புதுமையை காட்டும் மணிரத்னம், தன்னுடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் முதல் பாகத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்த நிலையில், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியான நாளை ரிலீஸாகிறது. உலக அளவில் இந்தப் படத்திற்காக பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு முன்பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். ரிலீசுக்கு முன்பே பல கோடியை கல்லா கட்டி கொண்டிருக்கும் மணிரத்னம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

Also Read: ஜெயம் ரவிக்கு மட்டும் ரெண்டு கொம்பா.. முடியவே முடியாது என மறுத்த மணிரத்தினம்

Trending News