சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

விஜய் சேதுபதி மார்க்கெட்டை பிடிப்பதற்கு எடுத்த அஸ்திவாரம்.. இந்த விஷயத்தில் கோட்டை விட்ட 80ஸ் ஹீரோ

Actor Vijay Sethupathi: விஜய் சேதுபதி தற்போது ஹீரோவாக மக்கள் மனதில் பதிந்ததை விட சரியான வில்லன் என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து பல படங்களில் வில்லன் கேரக்டரை செய்து வருகிறார். எப்படிப் பார்த்தாலும் இவருக்கு பொருத்தமாக தான் இருக்கிறது. இவர் சில படங்களில் ஹீரோவாக வந்தாலும் அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

அத்துடன் பெரிய நடிகர்களுடன் வில்லனாக மோதும் போது அதுவும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. இதனாலையே தொடர்ந்து வில்லனாக நடிப்பதில் கவனம் செலுத்தி இவருடைய மார்க்கெட்டை சினிமாவில் தக்க வைத்துக் கொண்டு வருகிறார். ஒருவேளை ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று நடித்திருந்தால் ஒரு சில படங்களிலேயே காணாமல் போய் இருப்பார்.

Also read: விஜய் சேதுபதிக்கு ரஜினி கொடுத்த தரமான அட்வைஸ்.. ஓசில வேலை பார்த்தா காணாம போயிடுவ

அதற்குக் காரணம் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஆரம்பத்தில் நன்றாக ஓடினாலும் போகப் போக சொல்லும்படியாக இல்லை. அந்த நேரத்தில் கரெக்டான ஒரு பாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அதுதான் வில்லனுடைய கதாபாத்திரம். இப்படி வில்லனாக நடித்து தன் முகத்தை மக்களுக்கு அடிக்கடி காட்டிக் கொண்டு இருப்பதால் சினிமாவில் இவரால் நிலைத்து நிற்க முடிகிறது.

ஏனென்றால் பல படங்களில் நடித்த ஹீரோவை கூட மறப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் பெரிய நடிகர்களுடன் மோதிய வில்லன்களை அவ்வளவு ஈசியாக நம்மால் மறக்க முடியாது. அந்த சூட்சமத்தை நன்றாகவே தெரிந்து வைத்திருப்பதால் வில்லன் ரோலுக்கு அஸ்திவாரத்தைப் போட்டு விட்டார். ஆனால் இந்த விஷயம் எல்லாத்துக்கும் பொருந்துமா என்று சொன்னால் கண்டிப்பாக இல்லை.

Also read: அட்லீ ஹிரோ பார்த்து மிரண்டு போன விஜய் சேதுபதி.. தலைகால் புரியாமல் ஆடிய தருணம்

விஜய் சேதுபதிக்கு மட்டும்தான் இந்த விஷயம் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இவரைப் போல 80ஸ் ஹீரோவாக சினிமாவிற்குள் வந்தவர் தான் ஜெய்சங்கர். இவர் சில படங்களில் ஹீரோவாகவே நடித்து வந்தார். ஆனால் அதன் பின்பு வில்லன் வாய்ப்பு வந்ததால் அதை ஏற்று வில்லன் கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படத்தின் மூலம் இவருடைய சினிமா கேரியரே போய்விட்டது என்றே சொல்லலாம்.

இவர் வில்லனாக நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதன் பிறகு தொடர்ந்து இவருக்கு வரும் வாய்ப்புகள் குறைந்து கொண்டே போய்விட்டது. அடுத்து ஹீரோ வாய்ப்பு இல்லாமல், வில்லன் வாய்ப்பும் இல்லாமல் மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது. ஆனால் இந்த விஷயத்தில் விஜய் சேதுபதி கொடுத்து வைத்தவர். வில்லனாக நடித்த பின்பு மக்கள் இவரை வரவேற்க தயாராக இருக்கிறார்கள்.

Also read: 10 படங்களில் நடித்தும் பிரயோஜனம் இல்ல.. கடைசியாக விஜய் சேதுபதி நண்பருக்கு அடித்த ஜாக்பாட்

Trending News