Biggboss 7-Poornima: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் வெறுக்கப்படும் போட்டியாளர்கள் என்றால் அது மாயா மற்றும் பூர்ணிமா தான். ஒவ்வொருவரையும் வீட்டை விட்டு வெளியில் அனுப்புவதற்காக இவர்கள் பல்வேறு தகிடு தத்தங்களை செய்து வருகின்றனர். அதில் அந்த ரெட் கார்டு விவகாரம் மிகப்பெரும் விஸ்வரூபம் எடுத்தது.
அதை அடுத்து திட்டம் போட்டு காய் நகர்த்திய இருவரும் இப்போது ஒருவரை ஒருவர் நாமினேட் செய்யும் லெவலுக்கு வந்திருக்கின்றனர். இந்த சூழலில் பூர்ணிமாவின் உண்மை முகத்தை அவருடைய தோழி சோசியல் மீடியா பக்கத்தில் கிழித்தெறிந்துள்ளார்.
அதாவது கடந்த வாரம் நடந்த பூகம்ப டாஸ்க்கில் பூர்ணிமா 11 ஆண் நண்பர்களுடன் தங்கி இருந்ததை பற்றி பெருமையாக கூறினார். அதை பற்றி கூறியிருக்கும் தோழி இரண்டு பொண்ணுங்க சேர்ந்து தங்கறதுக்கே வீடு கிடைக்க மாட்டேங்குது. இதுல 11 பேர் கூட ஒரு பொண்ணு தங்குனத நம்பவா முடியுது. இதெல்லாம் சுத்த பொய்.
பூர்ணிமா எங்க ஆபீஸ்ல தான் ஒர்க் பண்ணா. அப்பவே நாலு அஞ்சு பசங்களை ஏமாத்தி காசு எல்லாம் ஆட்டைய போட்டுடுவா. அதனாலதான் ஆபீஸ்ல விட்டு வெளியில அனுப்பினாங்க. அதுக்கு அப்புறம் யூடியூப் சேனல் ஆரம்பிச்சா. ஆனால் ஸ்பான்சர் பண்ண சேனல்ல கூட இவ பணத்தை சுட்டுட்டா.
சரியான பொய் காரி அவ. என்னமோ கலை மேல அவளுக்கு ஆர்வம் வந்த மாதிரி என்ன ஒரு நடிப்பு என அந்த சிநேகிதி கிழி கிழி என கிழித்துள்ளார். ஏற்கனவே பூர்ணிமாவை பஜாரி ரேஞ்சுக்கு வச்சு செய்த நெட்டிசன்கள் இந்த ட்வீட்டை வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
Also read: ரெட் கார்டு சர்ச்சையால் குத்துப்பட்ட வனிதா.. பிரதீப் ஷேர் செய்த வாட்ஸப் ஸ்கிரீன் ஷாட் பின்னணி
ஆக மொத்தம் பூர்ணிமா வாயைத் திறந்தாலே பொய்தான் என்பது இதிலிருந்தே தெரிகிறது. அது மட்டுமல்லாமல் ஆண்கள் எல்லாம் இவரைப் பார்த்து தான் தெறித்து ஓடும் நிலைக்கு இருந்திருக்கின்றனர். அப்படிப்பட்டவருக்கு பிக்பாஸ் வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பது நல்ல வேடிக்கைதான்.