திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

குடும்ப ரீதியாக அஜித் கொண்டாடும் நட்பு.. 10 வருடத்திற்கு முன் ஏ கே செல்லும் டூர்

தனக்குரிய திறமையால் எந்த ஒரு சிபாரிசும் இல்லாமல் சினிமாவில் கால் பதித்தவர் தான் அஜித் குமார். மேலும் இவர் பல ஹிட் படங்களை கொடுத்து மக்கள் நெஞ்சில் நீங்காது இடம் பிடித்தவர். இவரின் நட்பை கொண்டு சில தகவல் கசிந்த நிலையில் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

இவர் தன் ஆரம்பகாலத்தில் சாதாரண மனிதனைப் போல தான் அங்கும் இங்கும் செல்லும் பழக்கம் கொண்டிருந்தார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு இவரின் படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுத்ததால் ரசிகர்களின் பேரன்பை பெற்றார். அதன்பின் மக்கள் இவரை எங்கு சந்தித்தாலும் சூழ்ந்து கொள்வது வழக்கமாகிவிட்டது.

Also Read: விஜய், அஜித்துக்கு இணையாக சாதனை படைத்த சூரி.. காணாமல் போன சிம்பு!

அவ்வாறு ஒரு முறை நம் ஆச்சி மனோரமாவின் துக்கத்திற்கு ஏ கே வந்த போது இவரை ஒரு கூட்டம் ஈ மொய்ப்பது போன்று சூழ்ந்து கொண்டது. அதிலிருந்து இவர் மீண்டு வர கஷ்டப்பட்டதால் தற்பொழுது பொது இடங்களில் இவர் அதிகமாக புழங்குவதில்லை. இது போன்ற சில காரணத்தால் தற்போது கூட்டமே வேண்டாம் என்ற நிலையில் வெறுப்படைந்து காணப்படுகிறார்.

அவரா இவர் என்று வியக்கும் அளவிற்கு ஆரம்ப காலத்தில் சுமார் 10 வருடத்திற்கு முன், ஏ கே தன் குடும்பத்துடன் அடிக்கடி கங்கை அமரன் வீட்டிற்கு செல்வதுண்டு. அங்கே சென்று வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி உடன் நெருக்கமாக பேசி அரட்டை அடிப்பதும் உண்டு. தனக்கு பொழுது போகவில்லை என்றால் அங்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

Also Read: தமிழில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் 5 நடிகர்கள்.. விஜய், அஜித்தை பின்னுக்குத் தள்ளும் நடிகர்

அடிக்கடி இவர் ஒரு டூர் மாதிரி அவர்கள் வீட்டிற்கு போய் வருவதுண்டு. இத்தகைய தகவல் ஒருபுறம் கேட்க வியப்பாக இருந்தாலும் மறுபுறம் தற்பொழுது ரசிகர் கூட்டத்திற்கு பயந்து வாழ்ந்து வருகிறார் ஏ கே என்பது வேதனைக் கொள்ளச் செய்கிறது. ஒரு மனிதன் புகழின் உச்சியில் சென்றால் இது போன்ற சின்னஞ்சிறு சந்தோஷத்தை இழக்க நேரிடுகிறது.

அது மட்டும் அல்லாமல் இவரின் ரசிகர்கள் சினிமாவில் இருந்து மட்டுமல்ல இவரின் ரேசிங் மீது ஆர்வம் கொண்டவர்களும் இவரை சுற்றி வளைப்பது வழக்கமாகிவிட்டது. ஒரு சிலர் இவரின் சுபாவம் இதுதான் போல எனவும் நினைப்பார்கள். ஆனால் உண்மையில் எல்லாரையும் போல சாதாரணமான மனிதன் தான் ஏ கே தற்பொழுது பிரபலமாக மாறியதால் இவ்வாறு காணப்படுகிறார்.

Also Read: அஜித் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. விடாமுயற்சிக்கு ஆப்பு வைத்த முக்கிய பிரச்சனை

- Advertisement -

Trending News