வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சோத்துலையும் அடி வாங்கியாச்சு, சேத்துலையும் அடிவாங்கியாச்சு.. தனுஷ்-சிம்பு கட்டிப்புடி வைத்தியத்தில் இத கவனிச்சீங்களா?

Dhanush: நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்பு நேற்று ஒரு திருமண விழாவில் சந்தித்த புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலானது. சமகாலத்து போட்டியாளர்கள், ஒரு காலகட்டம் வரை இருவரும் எந்த ஒரு பொது விழாக்களிலும் முகம் கொடுத்த கூட பேசியது இல்லை.

நான்கு வருடங்களுக்கு முன்பு கூட சினிமாவில் கம் பேக் கொடுக்கும் போது சிம்பு தனுஷை மறைமுகமாக தாக்கி இருப்பார். ஈஸ்வரன் படத்தில், அழிக்க வந்த அசுர இல்லடா, காக்க வந்த ஈஸ்வரன் என்ற வசனம் கூட அதனால் தான் பேசி இருப்பார்.

திடீரென பார்த்தால் மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப் தான் என்பது போல் ஆரத்தழுவி பரஸ்பர அன்பை புரிந்து கொண்டார்கள். அது மட்டும் இல்லாமல் டிசைன் டிசைனாக இவர்கள் எடுத்த புகைப்படங்கள் நயன்தாராவை வெறுப்பேற்றுவதற்கு தான் என நெட்டிசன்கள் கொளுத்தி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சோத்துலையும் அடி வாங்கியாச்சு, சேத்துலையும் அடிவாங்கியாச்சு

அது மட்டும் இல்லாமல் மேன்மக்கள் மேன்மக்கள் தான் அதை தனுஷ் மற்றும் சிம்பு பின்பற்றுகிறார்கள் என்றெல்லாம் புகழாரம் வேற. என்னதான் பெருமையாக பேசினாலும் நக்கல் நையாண்டி அடிப்பதற்கு என ஒரு கூட்டம் இருக்கிறது.

அவர்களின் விமர்சனம் தான் பார்த்ததும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. சந்திரமுகி படத்தின் ஒரு காமெடி காட்சியில் வடிவேலு சோத்துலையும் அடி வாங்கியாச்சு, சேத்துலையும் அடி வாங்கியாச்சு என்று சொல்ல்லியிருப்பாரு.

அது இவங்க 2 பேருக்கும் சரியாக பொருந்துகிறதாம். அதாவது சிம்புவுக்கு பல வருடங்களுக்கு முன்னால், எக்ஸ் காதலியாக இருந்தவர் நடிகை நயன்தாரா. அவர் இதான் தனுஷை லெப்ட் அண்டு ரைட் வாங்கியிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் பல வருடமாக சிம்புவின் முதல் காதலி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்ற கதையும் மீடியாவில் ஓடி கொண்டிருக்கிறது. தனுஷை கல்யாணம் பண்ணி அவரும் இப்போது டாட்டா காட்டி விட்டார். அதனால் தான் சிம்பு, தனுஷுக்கு எல்லாம் இப்படி தான், டோன்ட் வரி ப்ரோ என கட்டிப்புடி வைத்தியம் செய்ததாக சிலாகிக்கிறார்கள்.

Trending News