வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கமல் வீட்டை விட்டு துரத்த போவது யாரை.? எலிமினேஷனால் தலைகீழாக மாறப் போகும் பிக்பாஸ்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் சுவாரஸ்யமாகவும் ரணகளமாகவும் நகர்ந்து வருகிறது. ஐந்து புது வரவுகள் வீட்டுக்குள் வந்ததிலிருந்தே பழைய போட்டியாளர்கள் வேண்டாத விருந்தாளியை பார்த்தது போல் முகத்தை வைத்துக்கொண்டு சுற்றி வந்தனர். அது சில சமயங்களில் வெளிப்படையாகவும் தெரிந்தது.

அதைத்தொடர்ந்து அத்தனை பேரையும் அவர்கள் நாமினேஷனுக்குள் சிக்க வைத்ததும் ஆட்டம் களை கட்டியது. அந்த வகையில் இந்த வாரம் அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்னபாரதி, மணி, மாயா, ஐஷு, அக்ஷயா ஆகியோர் நாமினேஷனுக்கு தேர்வானார்கள். இதில் கடைசி இரண்டு இடத்தில் மாயா மற்றும் ஐஷு இருக்கின்றனர்.

இந்த இருவருமே வீட்டை விட்டு அனுப்பப்பட வேண்டியவர்கள் தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் வெறுப்பை இவர்கள் சம்பாதித்து வருகின்றனர். ஆனால் முதலில் ஐஷுவை துரத்தலாம் என்பது தான் ஆடியன்ஸின் எண்ணம். ஏனென்றால் நிக்சனுடன் இவர் அடிக்கும் கூத்து கொஞ்ச நஞ்சம் கிடையாது.

Also read: அக்கானு கூப்பிட்டு அசிங்கமா பேசுறான்.. பேட்டியில் ஆதங்கப்பட்ட பாரதிகண்ணம்மா

அதனாலேயே அவர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி விடுவார் என ஆணித்தரமாக நம்பப்பட்டது. ஆனால் இப்போது மாயா வெளியேறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் முழுக்க முழுக்க இது டிஆர்பிக்காக விஜய் டிவி செய்யும் வேலையாக மட்டும் தான் இருக்கும்.

அப்படி மாயா வீட்டை விட்டு வெளியேறினால் இனி வரும் பிக்பாஸ் விளையாட்டு தலைகீழாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் வீட்டில் ஒவ்வொருவரையும் எப்படி வீழ்த்த வேண்டும் என்ற சூட்சுமம் இவருக்கு நன்றாகவே தெரிகிறது. அத்துடன் பூர்ணிமா பிரதீப் ஆகியோரையும் மூளை சலவை செய்து காய் நகர்த்தி வருகிறார்.

மேலும் அடுத்த வாரம் கேப்டனும் இவர்தான். இப்படி மாயா பல வேலைகளை பார்த்திருக்கும் நிலையில் எலிமினேட் செய்யப்பட்டால் பல தந்திரங்கள் உடையவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் கமல் யாரை வீட்டை விட்டு துரத்த போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு நிமிடமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

Also read: பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் இவர்தான்.. தலைகீழாக மாறப் போகும் ஸ்மால் பாஸ் வீடு

Trending News