திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எதுவும் செட் ஆகாமல் தவிக்கும் தளபதி.. இங்கிலாந்து, லண்டன் சென்றும் பிரயோஜனம் இல்லை

தளபதி விஜய் சில காலமாக மிகுந்த சங்கடத்தில் இருந்து வருகிறார். அதுவும் அவருடைய பீஸ்ட் படத்தில் இருந்து நிறைய மாறுதல்கள் அவரிடம் தெரிகிறது. அதாவது விஜய்யிடம் மாறுதல் மனதளவிலையோ, உடலளவிலையோ இல்லை. அவருக்கு இருக்கும் பிரச்சனையே வேறு.

சமீபகாலமாக விஜய் மீது தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு முறையும் விஜய்யை பார்க்கும்போது ஹேர் ஸ்டைல் வெவ்வேறு விதமாக உள்ளது. இதனால் பல வகையான விக்கை விஜய் பயன்படுத்தி வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Also Read : 125 கோடி பத்தல, பணத்தாசை யாரை விட்டுச்சு.. ரஜினியின் பாலிசியை கையிலெடுத்த தளபதி விஜய்

இதனால் விஜய் தலைமுடி உதிர்தலை கட்டுப்படுத்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து என எல்லா பக்கமும் சென்று ட்ரீட்மெண்ட் செய்து விட்டாராம். ஆனால் இப்போது வரை இதற்கான பிரச்சனை தீர்ந்த பாடு இல்லையாம்.
ஆகையால் என்ன செய்வதென்று தெரியாமல் விஜய் முழித்து வருகிறாராம்.

சமீபத்தில் கூட விஜய் தனது ரசிகர்களை பனையூரில் சந்தித்தார். அதில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் காரில் வந்த இறங்கினார். அவரின் தலைமுடியை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். அந்தக் கூட்டத்தில் கூட விஜய்க்கு இந்த முடி செட்டாகவில்லை என்று சலசலப்பு ஏற்பட்டது.

Also Read : என்னப்பா இது புது உருட்டா இருக்கு.. அஜித், விஜய்யை பற்றி வெளிவந்த ஷாக்கிங் ரிப்போர்ட்

மேலும் பிரபல நாளிதழ் ஒன்றில் நடுத்தர வயதுடைய மாஸ் ஹீரோ ஒருவருக்கு முடி உதிர்தல் பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகிறார், அதனால் வெளிநாடு சென்று ட்ரீட்மென்ட் செய்தும் பிரச்சனை தீர்ந்தபாடு இல்லை என விஜய் பற்றி கிசுகிசு எழுதப்பட்டிருந்தது.

அதன் பின்பு தான் விஜய் இந்த சிகிச்சைக்கே சென்றதாக பிரபல இயக்குனர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி போல் வெளியில் இயல்பாக இருந்துவிட்டு படத்துக்கு மட்டும் விஜய் விக் பயன்படுத்தலாம் என பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : காரும் கிடையாது, வீடும் கிடையாது.. 50 படங்களில் முக்கியமான ரோலில் நடித்த விஜய் பிரண்டுக்கு இப்படி ஒரு நிலைமையா?

Trending News