வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

யுவன் சங்கர் ராஜாவை குஷிபடுத்திய தளபதி.. சுயநலத்திற்காக யாரும் செய்யாததை செய்த விஜய்

Actor Vijay: பெரும்பாலும் அஜித் நடித்த படங்களில் அதிகமாக வெற்றி பெற்ற படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா தான். இவர்கள் இரண்டு பேரும் காம்பினேஷனில் வரும் படங்கள் மக்களிடம் அமோக வரவேற்பை பெறும். அதனாலயே இவர்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக பார்க்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட யுவன், விஜய்க்கு புதிய கீதை என்ற படத்தில் இசையமைத்திருக்கிறார்.

ஆனால் இந்த படம் விஜய்க்கு மிகவும் பெயிலியர் ஆன படமாக மாறிவிட்டது. இதனாலேயே இவர்கள் இரண்டு பேரும் எந்த படங்களிலும் காம்பினேஷன் செட் ஆகாமல் போய்விட்டது. அதன்பின் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்திற்கு யுவன் தான் இசையமைக்க போகிறார்.

Also read: அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை தூக்கிவிடும் சல்மான் கான்.. 2024-ஐ குறி வைத்த மெகா கூட்டணி

மேலும் அஜித் நடித்த வலிமை படத்திற்கு யுவன் வாங்கிய சம்பளம் 1 கோடி தான். அந்த வகையில் தளபதி 68 படத்திற்கு இதை விட கம்மியாக தான் சம்பளம் கிடைக்கும் என்று நினைத்திருக்கிறார். ஆனால் இவர் எதிர்பார்த்ததை விட யுவனுக்கு 3 கோடி சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று விஜய் சொல்லி இருக்கிறாராம்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத யுவன் இந்த விஷயத்திற்கு பிறகு தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் திக்கு முக்காடி வருகிறார். விஜய் இப்படி செய்ததற்கு காரணம் யுவனை குஷிப்படுத்தி இவருடைய கவனத்தை முழுமையாக திரும்புவதற்காக தான் இந்த மாதிரி எல்லாம் செய்திருக்கிறார்.

Also read: லியோவை விட அதிக விலைக்கு போன விஜய் 68.. அநேகத்துக்கு வெங்கட் பிரபுவிடம் அசிங்க பட போகும் லோகேஷ்

அதே நேரத்தில் இதுவரை யுவனுக்கு கிடைக்காத சம்பளமாக பார்க்கப்பட்டு வருகிறார். இதனாலையே முழு சந்தோஷத்தில் எப்படியாவது விஜய்க்கு மாஸ் படமாக இருக்க வேண்டும் என்று  திட்டம் தீட்டி வருகிறார். எப்படி அஜித்துக்கு மங்காத்தா, பில்லா போன்ற படங்கள் மூலம் மாஸ் கிடைத்ததோ அதை போல் விஜய்க்கு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார்.

இதை தான் சொல்வார்களோ சின்ன மீனை போட்டு பெரிய மீனு பிடிக்கணும்னு, இதை கச்சிதமாக விஜய் செய்திருக்கிறார். யாருக்கு என்ன செய்தால் என்ன நடக்கும் என்று பிளான் பண்ணி காய் நகர்த்தி வருகிறார். ஒருவேளை அரசியலில் இறங்கியதால் எல்லா விஷயத்தையும் இதே கண்ணோட்டத்தில் பார்த்து வருகிறாரோ என்னமோ. எது எப்படி இருந்தாலும் தளபதி 68 படத்தில் எதிர்பார்ப்புகள் அதிகமாக தான் இருக்கிறது.

Also read: அனிருத்தை ரிஜெக்ட் செய்த ஏஜிஎஸ்.. தளபதி 68இல் யுவன் வர காரணம்

Trending News