திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

பிறவி கலைஞர், அவன நடிக்க விடுங்க.. முதுகுல குத்துனவருக்கும் சிபாரிசு செய்த கேப்டனின் பெருந்தன்மை

Captain Vijayakanth: கேப்டன் விஜயகாந்தின் மறைவால் தமிழகமே கலக்கத்தில் இருக்கிறது. தமிழ் சினிமாவிற்காக பல்வேறு விஷயங்களை செய்த கேப்டன் இப்போது இல்லை என, அவரது உடலை பார்த்து பலரும் கண்ணீர் விட்டு கொண்டிருக்கின்றனர். ‘நல்ல மனுஷன் போயிட்டாரே!’ என்பதை தான் எல்லோரும் திரும்பத் திரும்ப சொல்கின்றனர்.

இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த சமயத்தில் சின்ன சின்ன நடிகர்களையும் தூக்கிவிட்டு இருக்கிறார். அதிலும் குறிப்பாக காமெடி நடிகராக கோலிவுட்டில் ரவுண்டு கட்டிய வடிவேலு, வெளியில் தெரிவதற்கு காரணம் கேப்டன் தான். அவருடைய படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டார். ஆனால் அப்படிப்பட்டவரையே வடிவேலு மேடையில் மோசமாக பேசிய சம்பவமும் நடந்திருக்கிறது. கேப்டன் தேமுதிக கட்சியை துவங்கி களத்தில் போட்டியிட்ட போது, அவருக்கு எதிராக நின்ற திமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் வடிவேலு.

அப்போது, ‘கேப்டன், எதுக்கு கேப்டன் நீ.. எந்நேரமும் தண்ணி போடுறவன் பெயர் கேப்டனா? தண்ணீரில் மிதக்கும் கப்பலை ஓட்டியவனுக்கு பேர்தான் கேப்டன்’ என்று வளர்த்துவிட்டவரையே வாய் கூசாமல் கழுவி ஊற்றினார். இந்த வாய் கொழுப்பால் தான் வடிவேலுக்கு ரெட் கார்ட் கொடுத்து ஐந்து வருடங்களாக சினிமாவில் நடிக்க விடாமல் ஒதுக்கி வைத்திருந்தனர்.

Also Read: விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்.. ஆவேசத்தில் தகாத வார்த்தைகளால் திட்டிய விசுவாசிகள்

கேப்டனின் பெருந்தன்மை

ஆனால் அப்போதும் கூட கேப்டன் பல தயாரிப்பாளர்களிடம், ‘வடிவேலு ஒரு பிறவிக் கலைஞர், அவன் நடிக்க வேண்டும் வாய்ப்பு கொடுங்க’ என்று பெருந்தன்மையாக சிபாரிசு செய்துள்ளார். இந்த விஷயத்தை சொல்லும்போது அருகில் அவருடைய மனைவி பிரேமலதா அவர்களும் அமர்ந்திருக்கிறார். அவர்தான் இப்போது இந்த விஷயத்தை சமீபத்திய பேட்டியல் தெரிவித்துள்ளார். ‘மனசுல எதையும் போட்டுக்காமல் தனக்கு துரோகம் செய்தவர்களும் நல்லா இருக்கணும் என நினைப்பவர் தான் கேப்டன்’ என்று தன்னுடைய கணவரை குறித்து பெருமையுடன் பேசினார்.

இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. திரைக்கலைஞர்களுக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய நினைத்து, பல விஷயங்களை செய்த கேப்டனின் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால், அவர் அரசியலிலும் சினிமாவிலும் இன்னும் சாதித்திருக்க முடியும். அவருடைய நல்ல மனசு யாருக்கு வரும் என்று தொண்டர்களும் ரசிகர்களும் கேப்டனின் மறைவால் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர்.

Also Read: சின்ன பின்னமாக உடைக்கப்பட்ட விஜயகாந்தின் சொத்து.. மனம் உருக கேப்டன் பேசிய வார்த்தைகள்

- Advertisement -spot_img

Trending News