செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

துணிவு பட வெற்றிக்கு இவர் தான் முக்கிய காரணம்.. வினோத்துக்கு முதுகெலும்பாக இருந்த மேதை

அஜித்தின் அஸ்தானை இயக்குனரான ஹெச் வினோத் இதுவரை வலிமை, நேர்கொண்ட பார்வை பிறகு தற்போது ரிலீஸ் ஆகி இருக்கும் துணிவு படத்தையும் வெற்றிகரமாக இயக்கியுள்ளார். இதனால் ரசிகர்களால் திரையரங்குகளில் கொண்டாடப்படும் துணிவு, அனைத்து தர மக்களையும் சென்றடைந்துள்ளது.

அதில் வரும் வங்கி கொள்ளை மற்றும் வங்கியில் நடைபெறும் ஊழல்களை எடுத்துக் காட்டியுள்ளனர். இது மிகப் பெரிய வரவேற்பு பெற்று படம் வெற்றி அடைந்துள்ளது. இதற்கு இயக்குனர் ஹெச் வினோத்திற்கு முதுகெலும்பாக இருந்த பிரபலத்தை பற்றி செய்திகள் வெளியாகி உள்ளது.

Also Read: இமயமலை என தெரியாமல் மோதிப் பார்த்த 2 திமிங்கலங்கள்.. விஜய், அஜித் சேர்ந்து கூட தொட முடியாத ரஜினியின் முதல் நாள் வசூல்

இவரால்தான் தற்போது துணிவு படம் பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது ஹெச் வினோத்தின் துணிவு படத்தின் வெற்றிக்கு முழு பொறுப்பு ஆனந்த் ஸ்ரீனிவாசன் பொருளாதார மேதை. இந்த படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முடிவெடுத்த வினோத், ஆனந்த் ஸ்ரீனிவாசனை சந்தித்து அவரின் யோசனைகளை கேட்டு தான் எடுத்துள்ளார்.

இதனால் இந்த பட வெற்றிக்கு ஆனந்த் சீனிவாசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதைப் பற்றி அவரிடம் கேட்டபிறகு ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறியதாவது, ‘நான் கூறுவதை விட அஜித் நடித்ததால் இது இளைஞரிடம் சென்றடைந்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியுள்ளது’ என்று கூறியுள்ளார்.

Also Read: கனவுக்காக வைராக்கியத்தை கைவிட்ட சந்தானம்.. AK 62 அஜித்துடன் நடிக்க இப்படி ஒரு காரணமா?

மேலும் துணிவு படத்தை குறித்து பல ஐடியாக்களை ஹெச் வினோத்திற்கு ஆனந்த் சீனிவாசன் கொடுத்திருக்கிறார். ஹெச் வினோத் மட்டுமல்ல இந்த பொருளாதார மேதையை சோசியல் மீடியாவில் பலரும் பின்பற்றி வருகின்றனர். அதிலும் இவர் சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் அரசியல் மற்றும் பொருளாதார நிபுணராக பல்வேறு கருத்துகளை எடுத்துரைக்கிறார்.

இது இளைஞர்களுக்கு பயனுள்ள வகையில் இருப்பதுடன், பல இளைஞர்களுக்கு வாழ்வில் ரீதியாக சேமிப்பின் அவசியம் உள்ளிட்ட பல விஷயங்களை தெளிவுபடுத்துகிறார். அவர் இப்போது ஹெச் வினோத்தின் துணிவு பட வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்திருக்கும் செய்தி வெளியாகி உள்ளதால் தல ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

Also Read: 12 ஆயிரம் கோடி நிஜ கொள்ளையை வெளிச்சம் போட்டு காட்டிய வினோத்.. துணிவு படத்தில் மறைந்திருக்கும் உண்மை

Trending News