புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பிக் பாஸில் மாஸ்டருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்த காதலி.. மேடையில் நன்றி மறந்த மனுஷன்

பிக் பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் நேற்று 20 போட்டியாளர்களுடன் கோலாகலமாக துவங்கியது. இதில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் கமல் முன்பு பிக்பாஸ் மேடையில் தாங்கள் எதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறோம் என்றும், எப்படி இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்தது என்றும் பகிர்ந்துகொண்டனர்.

அப்போது ஒரு போட்டியாளர் மட்டும் தன்னுடைய முன்னாள் காதலியால் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என்ற விசயத்தை தெரிவிக்காமல் சோஷியல் மீடியாவில் பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பும் வகையில் செய்துவிட்டார். இதேபோன்றுதான் யாஷிகா ஆனந்த் தனக்குரிய செல்வாக்கை வைத்து தன்னுடைய 2 பாய்பிரண்டை பிக்பாஸ் வீட்டில் அனுப்பி வைத்தார்.

Also Read: பிக்பாஸில் 20 போட்டியாளர்களுக்கும் தெரிந்த ஒரே முகம்.. ஓவர் நைட்டில் ட்ரெண்டான சம்பவம்

அதாவது இதற்கு முந்தைய சீசன்களில் பத்த வைக்கும் வேலையை சரியாக பார்க்கும் வத்திகுச்சி வனிதா உடைய சிபாரிசின் பேரில் ராபர்ட் மாஸ்டரை தற்போது பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் ராபர்ட் மாஸ்டர் அதைப்பற்றி பிக்பாஸ் மேடையில் எதுவுமே சொல்லாமல் நன்றி கெட்டவன் மனுஷன் ஆயிட்டாரு. அவர் எப்படிச் சொல்வார்.

ஏற்கனவே வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷில் வாழ்ந்தது அனைவருக்கும் தெரிந்தும். அதை அப்பட்டமாக பொய் என்று வாதிட்டவராச்சே. அப்படி இருக்கும்போது வனிதாவால்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொள்ள மாட்டார்.

Also Read: பிக்பாஸ் வீட்டுக்குள் களமிறங்கும் விவாகரத்து நடிகர்.. அப்ப ஒரு லவ் ஸ்டோரி கன்ஃபார்ம்

மேலும் பிக்பாஸ் வீட்டில் நிச்சயம் ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா இருவரையும் வைத்து மற்ற போட்டியாளர்கள் கிசுகிசுக்கள் தான் போகிறார்கள் அதை வைத்து வெளியில் இருக்கும் வனிதா பெரும் சர்ச்சையை கிளப்ப காத்திருக்கிறார் .

இதனால் பிக் பாஸ் சீசன்6ல் சர்ச்சைக்குரிய ஒரு சில நபர்களை விஜய் டிவி தேர்ந்தெடுத்து தனது டிஆர்பியை எகிற வைப்பதற்காக பின்புலத்தில் பல வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் நினைப்பது போல் அடுத்தடுத்த பிரச்சினைகள் இனிதான் பிக்பாஸ் வீட்டில் நடக்கப்போகிறது. அதைப் பார்ப்பதற்கு ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

Also Read: பிக் பாஸ்க்கு வந்து பெயரை கெடுத்துக்க போகும் பிரபலம்.. அடுத்த லாஸ்லியா இவங்கதான்

Trending News