திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

கண் சிமிட்டாமல் பெண்கள் சைட் அடிக்கும் 5 நடிகர்கள்.. மாப்பிள்ளை நா அது அரவிந்த்சாமி மாதிரி தான்

சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் சில நடிகர்களை மட்டும் தான் பார்த்து ரசிக்கும் படியான கொள்ளளவு இருக்கும் படியாக இருப்பார்கள். அந்த நடிகர்களை கண் சிமிட்டாமல் பெண்கள் சைட் அடிக்கும் அளவிற்கு அழகை கொண்டவர்கள். அப்படிப்பட்ட நடிகர்களை பற்றி நாம் பார்க்கலாம்.

கமலஹாசன்: இவர் கருப்பு வெள்ளை காலத்தில் முதல் டிஜிட்டல் காலம் வரை பல சாதனைகளை புரிந்து இருக்கிறார். அத்துடன் இவர் பலவிதமான திறமைகள் தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறார். எத்தனையோ வேடங்களில் போட்டு அதையும் கச்சிதமாக நடித்து ரசிகர்களை கவரக்கூடியவர். பொதுவாக எல்லா கேரக்டரும் அனைவருக்கும் சூட்டாகாது. ஆனால் இவருக்கு அப்படி ஏதும் வரைமுறை கிடையாது. அதே மாதிரி லேடிஸ் கெட்டப் என்றால் அதற்கு ஒரு அழகு வேண்டும். அது இவரிடம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதனால்தான் அவ்வை சண்முகி படத்தில் லேடிஸ் கெட்டப் போட்டும் இவருடைய அழகு ரசிக்கும்படியாக இருந்தது. அத்துடன் அவ்வளவு கலரான நடிகர்.

Also read: ஓடுற குதிரைகளை வளைத்து போடும் கமலஹாசன்.. வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரைகள்

எம்ஜிஆர்: சிறந்த நடிகர், சரியான அரசியல் தலைவருமாக இருந்து மறைந்து போன எம் ஜி ஆர் இப்பொழுது காலத்திலும் மக்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்து வருகிறார். இவர் அந்த காலத்து சினிமாவை ஆட்சி செய்து அனைத்து புகழையும் பெற்று புகழின் உச்சத்துக்கு சென்றவர். இவர் நடித்த எத்தனையோ படங்களின் மூலம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். அதிலும் குறிப்பாக பெண்கள் அனைவரும் இவரை ரசித்து இந்த மனுஷன் என்ன தங்க புஷ்பத்தை சாப்பிட்டு இருப்பாரோ அவ்வளவு வெள்ளையாக இருக்கிறார் என்று சொல்லும் படியான கொள்ள அழகு கொண்டவர்.

சரத் பாபு: இவர் சினிமாவில் 80, 90களில் நுழைந்து 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மிகவும் பிரபலமான நடிகர். அதிலும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழியிலும் நடித்து எல்லார் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இவர் நடித்த அந்தக் காலத்தில் இவருக்கு என்று பெண் ரசிகர்கள் ஏராளமானவர்கள். இவர் படத்தை பார்ப்பதற்கு பெண்கள் திருட்டுத்தனமாக வீட்டில் சொல்லாமல் திரையரங்குகளில் படத்தை பார்த்து ரசிப்பார்கள். அதிலும் முள்ளும் மலரும் படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பால் வந்த “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா” இந்த பாடல் இப்பொழுதும் மெய்சிலிர்க்க வைக்கும்.

Also read: சரத்பாபுக்கு தயாரிப்பாளராக சம்பளம் போட்ட பயில்வான்.. குறை சொல்ல முடியாமல் கண்கலங்கிய சம்பவம்

அஜித்: ஒரு காலத்துல இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு பெண் ரசிகர்கள் கிறங்கி போய் இருந்தார்கள். அதிலும் இவர் நடிப்பில் வெளிவந்த ஆசை, காதல் மன்னன், காதல் கோட்டை போன்ற படங்களை பார்க்கும் பொழுது இவர் தான் இந்த உலகத்திலேயே அழகன் என்று சொல்லும் அளவிற்கு அவ்வளவு கலரும், சிரிப்பும் இருக்கக்கூடிய நடிகர். அதிலும் பெண்கள் இவரை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பேரழகன் என்றை சொல்லலாம்.

அரவிந்த்சாமி: பாலிவுட் நடிகருக்கு இணையாக வெள்ளை வெள்ளையாக மொழு மொழுவென்று ஒரு நடிகர் இருக்கிறார் என்றால் அது அரவிந்த்சாமி தான். இவருடைய கலருக்கு அழகுக்கும் இணையாக எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் சொக்கி போய் கிடப்பது இவருடைய அழகு மட்டும் தான். முக்கியமாக பெண்கள் அவருடைய வீட்டில் எனக்கு அரவிந்த்சாமி மாதிரி தான் மாப்பிள்ளை வேணும் என்று சொல்லும் அளவிற்கு கலர் ஆனவர். இன்னும் சொல்லப் போனால் யாரையாவது நக்கல் அடிக்கும் போது ஆமா அப்படியே இவரு பெரிய அரவிந்த்சாமி அழகு என்று தான் உதாரணத்திற்கு இவரை எடுப்போம். அந்த அளவிற்கு ஆண் அழகன்.

Also read: அஜித், அரவிந்த்சாமிக்கு முன்பே வெள்ளை தோல் நிறத்தில் ரசிக்கப்பட்ட நடிகர்.. அதிகமாக ரசித்த ரசிகைகள்

- Advertisement -

Trending News