22 வயது நடிகையை அஜித்துக்கு ஜோடியாக கோர்த்துவிட்ட குட் பேட் அக்லி டீம்.. மகேஷ்பாபுவின் அதிர்ஷ்ட தேவதை

Ajith in Good Bad Ugly: அஜித்தை பொறுத்தவரை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடிப்பை மட்டுமே கொடுத்து ரசிகர்களை குஷி படுத்த கூடியவர். அப்படிப்பட்ட இவருடைய படம் தொடர்ந்து வெளிவிட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ரசிகர்களுக்காக அப்பப்போ ஒரு படத்தை பண்ண வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே பயணித்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கலை ஒட்டி வெளிவந்த துணிவு படத்திற்குப் பிறகு இன்னும் இவருடைய படம் வெளிவரவில்லை. விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி உடன் கூட்டணி வைத்து நடித்துக் கொண்டு வருகிறார். ஆனாலும் இன்னும் வரை படப்பிடிப்பு முடிந்த பாடாக இல்லை.

படம் ஆரம்பத்தில் இருந்து ஏதாவது ஒரு பிரச்சனையை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. இதனால் அஜித் அதிரடியாக அவருடைய அடுத்த படத்தை கமிட் பண்ணி அதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் அஜித்தின் தீவிர ரசிகராக இருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இணைந்து விட்டார்.

சிம்ரனைப் போல இடுப்பை வளைத்து நெளித்து ஆடும் நடிகை

திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி படம் மாஸ் ஆக வெற்றி பெற்றுவிட்டது. அதேபோல் அஜித்துடன் கூட்டணி வைத்திருக்கும் குட் பேட் அக்லி படத்தையும் வெற்றி பெற செய்வதற்கு மொத்த டீமும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் இப்படத்திற்கான ஆர்டிஸ்ட்டுகளை தேர்ந்தெடுக்கும் முயற்சி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது அஜித்துக்கு ஜோடியாக அக்கட தேசத்து நடிகையான 22 வயது ஹீரோயினை கோர்த்து விட்டிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை சமீபத்தில் வெளிவந்த குண்டூர் காரம் படத்தில் மகேஷ்பாபுவின் அதிர்ஷ்ட தேவதையாக நடித்த ஸ்ரீ லீலா.

இதுவரை தெலுங்கு, கன்னடம் படங்களில் மட்டும் நடித்து வந்தவர் முதன்முதலாக தமிழில் அஜித்துக்கு ஜோடியாக போகிறார். பொதுவாக அஜித் சமீபத்தில் நடிக்கும் படங்களில் ஹீரோயின் அவர் அளவுக்கு வயதில் இருக்கும் நடிகை தான் தேர்ந்தெடுக்க சொல்வார். ஆனால் குட் பேட் அக்லி படத்தில் ஸ்ரீ லீலாவை போட்டதற்கான காரணம் சிம்ரனை போல இடுப்பை வளைத்து நெளித்து ஆடுவார்.

அதனால் தான் இவரை வைத்து அஜித்துக்கு கொக்கி போட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆர்ட்டிஸ்டிகளையும் அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஆதிக் மும்மரமாக செயல்பட்டு வருகிறார். ஏனென்றால் அடுத்த வருட பொங்கலுக்கு இப்படத்தை ரிலீஸ் பண்ண வேண்டும் என்று நோக்கத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் வேகமாக பண்ணுகிறார்கள்.

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்