இன்று தமிழக சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றியபோது, தமிழகம் வெற்றி நடைபோடுகிறது என பாராட்டியுள்ளார்.
மேலும் தமிழக அரசு சிறப்பாக செயலாற்றியதற்காக விருதுகளை பெற்று வீர நடை போட்டு வருகிறது என்றும் ஆளுநர் பாராட்டினார்.
ஏனென்றால் ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு செய்ததன் மூலம் சமூக நீதியை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் நிலைநாட்டி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் சுமார் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கியதற்காக தமிழக முதல்வரை சிறப்பாக பாராட்டுவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
ஆகையால் தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னணி வகித்து நிர்வாக திறன் மிக்க மாநிலமாக விளங்குகிறது என்றும் பெருமிதத்துடன் கூறினார். எனவே தேசிய அளவிலும் பல்வேறு விருதுகளை தமிழகம் தனதாக்கி உள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டியுள்ளார்.