Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், கண் கெட்ட பிறகு தான் சூரிய நமஸ்காரம் பண்ணுவார்கள் என்று ஒரு சொலவடை இருக்கிறது. அது போல தான் ராகினி, அஜய்யை கல்யாணம் பண்ணிட்டு வந்தால் குடும்பமே சின்னா பின்னமாக சிதைந்து விடும் என்று காவேரி பயந்தார்.
அதற்காக கொஞ்சம் துணிச்சலுடன் அஜய்க்கும் ராகினிக்கும் ஏற்பாடு பண்ணின நிச்சயதார்த்தத்தை பாதியிலேயே நிறுத்துவதற்கு பிளான் போட்டார். அந்த பிளான் படி நிச்சயதார்த்தம் நடக்கும் பொழுது பசுபதியை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போனதால் நிச்சயதார்த்தம் நின்றுவிட்டது.
இதனால் கோபமடைந்த விஜய்யின் குடும்பம் காவிரியை வாய்க்கு வந்தபடி திட்டி சண்டை போட்டு விட்டார்கள். போதாக்குறைக்கு விஜய்யும் காவிரியை புரிஞ்சிக்காமல் ரொம்பவே திட்டி விட்டு அசிங்கப்படுத்தி விட்டார். அந்த சூழ்நிலையில் காவிரி யாரிடம் பேசுவது என்று தெரியாமல் தாத்தாவிடம் போய் பேசி மன்னிப்பு கேட்டார்.
காவிரியைப் புரிந்து கொண்ட தாத்தா மற்றும் விஜய்
ஆனால் தாத்தாவும் நீ பண்ணுனது தவறுதான். எதுவாக இருந்தாலும் எங்களிடம் கலந்து யோசித்து முடிவு எடுத்திருக்க வேண்டும். அதற்கு எல்லா உரிமையும் சுதந்திரத்தையும் நான் உனக்கு கொடுத்தேன். அதை நீ தவறாக பயன்படுத்தி விட்டாய் என்று தாத்தாவும் காவிரிக்கு எதிராக பேசி விட்டார்.
இதனால் துவண்டு போன காவிரி விடிய விடிய அழுது கொண்டே இருந்தார். பிறகு மறுநாள் காலையில் தாத்தா, விஜய்யிடம் வந்து காவேரி பண்ணினது சரிதான். அவள் இடத்தில் யார் இருந்தாலும் இப்படித்தான் பண்ணி இருப்பார்கள். நம் குடும்பத்திற்காக பெரிய ரிஸ்க் எடுத்து இந்த வேலையை பார்த்திருக்கிறார்.
அதைக்கூட நாம் புரிந்து கொள்ளாமல் அவளை திட்டி விட்டோம் என்று தாத்தா விஜய்யிடம் சொல்கிறார். உடனே விஜய்யும் ஆமாம் தாத்தா நான் கூட சரியாக புரிந்து கொள்ளவில்லை. ஆனால் காவேரி செய்தது எந்தவித தவறும் இல்லை என்று சொல்லிய நிலையில் காவிரி எங்க போனார் என்று தேடுகிறார்.
எப்படியாவது காவிரியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். ஆனால் காவேரி வீட்டில் இல்லை என்றதும் தாத்தா பரிதவித்து போய்விட்டார். அத்துடன் விஜய்யும் நாம் திட்டியதால் தான் காவேரி வீட்டை விட்டு போய்விட்டாரோ என்ற பயம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.
ஆனால் காவேரி பொருத்தவரை அந்த மாதிரி ஒரு முடிவு எடுக்கக் கூடிய ஆள் இல்லை. எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராக நின்னு துணிச்சலுடன் பார்க்கக் கூடியவர். அந்த வகையில் வீட்டை விட்டுப் போக வாய்ப்பு இல்லை. பக்கத்தில் இருக்கும் பொழுது அருமை தெரியாது என்று சொல்வது போல் காவிரி வீட்டில் இருக்கும்போது யாரும் புரிந்து கொள்ளவில்லை.
இப்பொழுது காவிரியை காணும் என்று ஒவ்வொருவரும் பரிதவித்து தேடுகிறார்கள். காவிரி பக்கத்தில் தான் எங்கேயோ இருந்து கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடுகிறார். அந்த வகையில் எல்லாருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சிட்டுக்குருவி போல் பறந்து விஜய் தேடி வரப் போகிறார்.