நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் சிம்பு.. ஒரே நேரத்தில் வரும் துன்பமும், இன்பமும்

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற பல படங்களில் சிம்பு நடித்து வருகிறார். இதில் கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு, ஏ ஆர் ரஹ்மான் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர் வருகின்ற ஜூன் 3ம் தேதி வெளியிட படக்குழு முடிவு எடுத்திருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது சிம்புவின் தந்தை டி ராஜேந்தரின் உடல் நிலை மோசமாக உள்ளது. அதாவது டிஆரின் வயிற்றில் சிறிது ரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும், அதற்காக உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது டிஆருக்கு வெளிநாட்டில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் சிம்பு படத்தின் டிரைலரை வெளியிட்டால் அது சரியாக இருக்காது எனக்கருதி வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் ஒரு முடிவு எடுத்துள்ளார். ஆனாலும் தற்போது இப்படத்தின் வினியோகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது.

பல முன்னணி நிறுவனங்களும் இப்படத்தில் விநியோகம் உரிமைக்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். எல்லாத்துக்கும் காரணம் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம்தான். சில வருடங்களாக தொடர் தோல்வியை கொடுத்துவந்த சிம்புக்கு மாநாடு படம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது.

மேலும் இதுவரை சிம்பு படங்களிலேயே அதிக வசூல் செய்த படமும் மாநாடு தான். இதனால் தற்போது வெந்து தணிந்தது காடு படத்திற்கு வினியோகம் சூடுபிடிக்கத் தொடங்கியதை நினைத்து சிம்புக்கு ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும் தனது தந்தையின் உடல்நிலையால் தற்போது வருத்தத்திலும் உள்ளார்.

Advertisement Amazon Prime Banner