வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தலைக்கனத்துடன் பேசித் திரியும் விஜய் சேதுபதியின் வாரிசு.. ஹீரோவாகனும்னா நாவடக்கம் ரொம்ப முக்கியம் சூர்யா

Vijay sethupathi’s Son surya: விஜய் சேதுபதி பல போராட்டங்களைக் கடந்து அவருடைய திறமையால் திரைபயணத்திற்குள் நுழைந்து தற்போது அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கிறார். தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் இவருடைய திறமையை நிரூபித்துக் காட்டி வருகிறார்.

இப்படி இவர் ஒரு பக்கம் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் வேலையில் இவருடைய மகனும் சினிமாவிற்குள் நடிகனாக இறங்கி விட்டார். அதாவது ஜவான் படப்பிடிப்பு நடந்த கொண்டிருந்த பொழுது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அடிக்கடி சூட்டிங் போய் பார்த்திருக்கிறார்.

அப்படி போன நேரத்தில் சூர்யாவை பார்த்த அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இவரை வைத்து ஒரு ஆக்சன் படத்தை எடுக்கலாம் என்று என்று முடிவு பண்ணி விட்டார். ஏற்கனவே சூர்யா நானும் ரவுடிதான் மற்றும் சிந்துபாத் போன்ற சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நாயகனாக அறிமுகமாகும் சூர்யா

அதன் மூலம் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் டபுள் சம்மதத்தை கொடுத்துவிட்டார். அந்த வகையில் அனல் அரசு இயக்கத்தில் “ஃபீனிக்ஸ் வீழான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் கமிட் ஆகி இருக்கிறார்கள்.

இப்படம் முழுக்க முழுக்க விளையாட்டு மட்டும் சண்டைக் காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இடையில் இப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பேசிய ஒரு விஷயம் கொஞ்சம் தடாலடியாக இருக்கிறது.

அதாவது அப்பா வேற நான் வேற அவருடைய பெயரை நான் எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருக்கிறேன். அதனால் தான் இப்படத்தில் கூட விஜய் சேதுபதி சூர்யா என போடாமல் வெறும் சூர்யா என்று மட்டும் போட சொன்னேன் என்று தெனாவட்டாக பேசியிருக்கிறார்.

என்னதான் அப்பா பெயரை பயன்படுத்தக் கூடாது என்று நினைத்திருந்தாலும் இந்த ஒரு வாய்ப்பு கிடைத்தது இவருடைய அப்பா மூலம் தான் என்பதே மறந்து தலைக்கனத்துடன் பேசியது போல் இருக்கிறது. அதுதானே அப்பா 8 அடி பாஞ்சா பிள்ளைங்க 16 அடி பாயும் சொல்லுவாங்க.

அது போல தான் விஜய் சேதுபதியே விட ஓவராக வாய் தொடுக்க பேசி இருக்கிறார். இது எப்படியோ ஹீரோவாக வேண்டும் என்றால் கொஞ்சம் நாவடக்கம் ரொம்ப முக்கியம்.

Trending News