புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஜீவானந்தத்தை அப்பாவாக ஏற்றுக் கொண்ட குணசேகரனின் வாரிசு.. மொத்த கதையும் வேறு எங்கேயோ திரும்புது

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திருவிழா நிகழ்ச்சியில் தரமான சம்பவம் நடக்கப்போகிறது. இதில் ஒவ்வொருவரும் அவர்களுடைய பகையை தீர்த்துக் கொள்ளும் வகையில் பக்காவாக பிளான் பண்ணி காய் நகர்த்தி வருகிறார்கள்.

அந்த வகையில் குணசேகரன் யாருக்கும் தெரியாமல் ஒரு மர்ம நபர் மூலம் ஜீவானந்தம் மற்றும் அப்பத்தாவிற்கு ஒரு ஆப்பை ரெடி பண்ணி வைத்திருக்கிறார். அடுத்ததாக ஜீவானந்தம் தன்னுடைய மனைவி இறப்பிற்கு காரணமான குணசேகரன் மற்றும் கதிரின் கதையை தீர்த்து விட வேண்டும் என்று திருவிழாவை சுற்றி நாலா பக்கம் தோழர்களை வேவு பார்க்க வைத்திருக்கிறார்.

அதனால் திருவிழா நிகழ்ச்சிக்கு குணசேகரன் தம்பிகளுடன் வந்ததும் இதை பார்த்து கச்சிதமாக ஜீவானந்தத்திற்கு கொடுக்க வேண்டிய தகவலை ஒரு தோழர் கொடுத்து விடுகிறார். உடனே ஜீவானந்தமும் இந்தா வந்துட்டேன் குணசேகரன் கதையை முடிப்பதற்கு என்று ஆவேசமாக யாருக்கும் தெரியாமல் திருவிழாவிற்கு வந்துவிடுகிறார்.

Also read: தொடர்ந்து கதையை சொதப்பும் எதிர்நீச்சல் சீரியல்.. மொத்த குறியும் குணசேகரன் மீது வைக்கும் ஜீவானந்தம்

அதே நேரத்தில் ஜீவானந்தம் என்ன பண்ணப் போகிறார் யாருக்கு என்ன ஆகப்போகிறது என்று பதட்டத்துடனே ஈஸ்வரி புலம்பித் தவிக்கிறார். அதற்கு ஆறுதல் கூறும் விதமாக சக்தி மற்றும் ஜனனி ஜீவானந்தத்தை நாங்கள் போய் தேடிப் பார்க்கும். அவர் எங்கே இருக்கிறார் என்று தெரிந்ததும், நான் உங்களிடம் வந்து சொல்கிறேன். நம்ம பேசி பார்ப்போம் என்று சக்தி ஜனனி, ஜீவானந்தத்தை தேடி அலைகிறார்கள்.

இதற்கிடையில் வெண்பாவை யாருக்கும் தெரியாமல் ஈஸ்வரி பாதுகாத்து வருகிறார். அடுத்ததாக ஜீவானந்தம் மறைமுகமாக குணசேகரனை குறி வைக்கிறார். ஆனால் அப்போது வெண்பா அப்பா என்று போயி அவரை டைவர்ட் பண்ணுகிறார். அப்பொழுது ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தத்திற்குள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அந்த நேரத்தில் ஈஸ்வரியின் மகள் தர்ஷினி ஜீவானந்தத்தை பார்த்து செண்டிமெண்டாக நான் உங்களை அப்பாவாக கூப்பிடலாமா என்று உருக்கமாக பேசுகிறார்.

இங்கே தான் கொஞ்சம் லாஜிக்கு இடிக்குது. அதாவது என்னதான் அப்பா கெட்டவராக இருந்தாலும் அவர் இருக்கும் பொழுது இன்னொருத்தரை அப்பா என்று சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும். ஆக மொத்தத்தில் இவர்கள் அனைவருக்கும் ஒரு சென்டிமென்ட் காட்சி உருவாகிறது. இதனால் ஜீவானந்தம் குணசேகரனை ஏதும் பண்ண வாய்ப்பு இல்லாதது போல் தெரிகிறது. ஆனால் கௌதம் குணசேகரனுக்கு குறி வைக்கிறார். அவரின் குறிக்கி யார் சிக்கப் போகிறார் என்பதுதான் கேள்விக்குறியாக தற்போது போய்க்கொண்டிருக்கிறது.

Also read: குணசேகரனை வாய் அடைக்க வைத்த அப்பத்தா.. பொறிவைத்து தூக்கப் போகும் ஜீவானந்தம்

Trending News