சினிமாவில் வாரிசு பிரபலங்கள் வந்தாலும் அவர்களில் ஜெயித்தவர்கள் சொற்பம் தான். அப்படி அம்மா ஒரு கால கட்டத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்த நிலையில் அவரது மகள் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின்பு வாய்ப்பு கிடைக்காததால் மற்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் வாரிசு நடிகை ஒருவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். ஆனாலும் தற்போது வரை கணவன் மீது காதலும் அன்பும் நடிகை வைத்துள்ளார் என பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
Also Read : கிளாமர் காட்டியும் பட வாய்ப்பு இல்லை.. 71 வயது நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 32 வயது நடிகை
மேலும் காதல் கணவர் விவாகரத்து பெற்ற நிலையில் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு உள்ளார். அவருக்கு இப்போது குழந்தைகளும் இருக்கிறது. விவாகரத்து பின்பு நானும் வேறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என பகிரங்கமாக வாரிசு நடிகை ஒத்துக்கொண்டு உள்ளார்.
ஆனால் அந்த உறவும் சில நாட்களிலேயே முறிந்தது. மேலும் காதலிக்கும் போது எதெல்லாம் பிடிக்கிறதோ திருமணம் நடந்த பின்பு அது எல்லாமே வெறுக்கும் படியாக இருக்கிறது என்று வேதனையுடன் வாரிசு நடிகை கூறியிருந்தார். மேலும் அவர் இப்போது குடும்பத்தை நடத்தவே மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்.
வாரிசு நடிகையாக சினிமாவிலும் அவரால் எப்படி ஜொலிக்க முடியவில்லை அதேபோல் சொந்த வாழ்க்கையிலும் ஜெயிக்க முடியவில்லை. மேலும் நடிகை இப்போதும் சினிமாவில் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அதில் கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்தை ஒட்டி வருகிறார்