
Gossip : சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளாக இருந்தாலும் திறமை இருந்தால் தான் ஜொலிக்க முடியும். அவ்வாறு வாரிசு நடிகை ஒருவர் ஒல்லி நடிகரின் படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படமே பெரிய நடிகரின் படம் என்பதால் தன்னுடைய திரை வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால் படத்தில் ரொமான்ஸ் காட்சிகளை தவிர பெரிதாக எதுவும் இல்லை.
இதனால் நடிகைக்கு கெட்ட பெயர் மட்டுமல்லாமல் படமும் பிளாப் ஆகிவிட்டது. முதல் படமே தோல்வி அடைந்த நிலையில் ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டார்.
பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் வாரிசு நடிகை
இதை அடுத்து வாரிசு நடிகைக்கு நான்கு வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்து உள்ளார். இதனால் தனது திரை வாழ்க்கையை இருண்டு போய்விட்டது என்றும் கூறியுள்ளார்.
அதன் பிறகு எப்படியோ ஒரு பட வாய்ப்பு கிடைக்க அதன் வழியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். ஆனாலும் அப்பா அளவுக்கு நடிகையால் பேர் வாங்க முடியவில்லை.
மேலும் தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு வராததால் அக்கட தேச படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதுவும் எடுபடாமல் போய்விட்டது.
வாரிசு நடிகையின் அப்பா இந்த வயதிலும் நிக்க கூட நேரம் இல்லாத அளவுக்கு சினிமாவில் படு பிஸியாக இருக்கிறார். அவரது வாரிசு பட வாய்ப்பு இல்லையே என்று புலம்பித் தவிக்கிறார்.