வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஜீவானந்தத்தை அப்பாவாக கூப்பிட ஆசைப்படும் குணசேகரனின் வாரிசுகள்.. உச்சகட்ட கோபத்திற்கு போன ஈஸ்வரி

Ethirneechal Serial: அனைவரும் விரும்பி பார்க்கக் கூடிய ஒரே சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல்தான். அதற்கு காரணம் பெண்களை அடிமையாக நடத்தும் ஆண்களிடமிருந்து சுதந்திரமாக வாழ ஆசைப்படும் பெண்களின் போராட்டம் தான். அந்த வகையில் தற்போது குணசேகரனை டம்மியாக்கி அந்த வீட்டில் இருக்கும் மருமகள்கள் சாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதே நேரத்தில் அவர்களுடைய தன்னம்பிக்கையும் அதிகரித்ததால் அடிமையாக நடத்துபவர்களை எதிர்த்து பேசவும் துணிந்து விட்டார்கள். தற்போது தர்ஷனுக்கு ஈஸ்வரி அவருடைய சம்பளத்தின் மூலம் பைக் வாங்கி கொடுத்து விட்டார். இதை தெரிந்ததும் கதிர் மற்றும் ஞானம் அவர்களிடம் சண்டை போட்டு வழக்கம் போல் வாய்க்கு வந்தபடி பேசி விடுகிறார்.

Also read: உப்புக்கு சப்பாக மாறிப்போன எதிர்நீச்சல்.. கதையே இல்லாமல் வெறும் வாய் சவடால் வைத்து உருட்டும் ஜீவானந்தம்

அத்துடன் எதிர்ச்சியாக தர்ஷன் மற்றும் தர்ஷினி பேசிக் கொள்கிறார்கள். அப்போது தர்ஷன் ஜீவானந்தத்தை பார்த்து பேசியதை சொல்கிறார். இப்படி ஒரு அப்பா நமக்கு இருந்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும் என்று அவர்கள் பேசிக் கொண்டு வருகிறார்கள். அந்த நேரத்தில் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கதிர் ரொம்பவே டென்ஷன் ஆகி கோபப்பட ஆரம்பித்து விட்டார்.

அப்பொழுது அளவுக்கு மீறி கதிர் வார்த்தையை பேசியதால் ஈஸ்வரி உச்சகட்ட கோபத்திற்கு சென்று விட்டார். சும்மா எதற்கெடுத்தாலும் பணம் சம்பாதித்து கொடுக்குறோம்னு சொல்லி வாய்கிழிய பேசுறீங்களே நாங்க சமைச்சு கொடுக்கலைன்னா உங்களால சாப்பிட முடியாது. எங்க கையால இவ்வளவு வருஷமா சாப்பிட்டு எங்களையே இந்த அளவுக்கு பாடாபடுத்தி எடுக்குறீங்க என்று கேட்கிறார்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான 5 வில்லன்கள்.. ஈடு கொடுக்க முடியாத மாரிமுத்துவின் இடம்

அத்துடன் உனக்கு இவ்வளவு தான் மரியாதை அதை காப்பாற்ற பார்த்துக்கொள். இனியும் எங்களை அடிமையாக வைக்கனும்னு நினைச்சேனா வெட்டி போடவும் தயங்க மாட்டேன் என்று ஆவேசமாக பேசுகிறார். இதோடு விடாமல் உன்னை எந்த அளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ அதையும் செய்ய தயங்க மாட்டேன் என்று சொல்கிறார்.

இதற்கிடையில் அவ்வப்போது மாரிமுத்து இல்லை என்றாலும் குணசேகரன் ஏற்கனவே நடித்த ஒரு சில காட்சிகளை இந்த சீனுக்கு ஏற்ற மாதிரி அவரைக் கொண்டு வந்து காட்டி விடுகிறார்கள். அந்த வகையில் இவ்வளோ பிரச்சனை வெளியில் நடந்தாலும் அதை வீட்டிற்குள் இருந்து குணசேகரன் சைலண்டாக பார்த்து நோட்டமிடுவதை எதிர்நீச்சல் டீம் அழகாக சித்தரித்து இருக்கிறது.

Also read: தம்பிக்காக இறங்கி வந்த புதிய குணசேகரன்.. நம்பர் ஒன் இடத்தை தக்க வைக்குமா எதிர்நீச்சல்

Trending News