புதன்கிழமை, ஜனவரி 22, 2025

குணசேகரனின் கொட்டத்தை அடக்கிய வாரிசுகள்.. ஜீவானந்தம் கொடுத்த ஐடியாவை பயன்படுத்திய தர்ஷினி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் நினைத்தபடி பக்காவாக காய் நகர்த்தி சித்தார்த்தை கண்டுபிடித்து விட்டார். அது மட்டும் இல்லாமல் கதிர், சக்தி மற்றும் ஞானத்தை போலீஸ் கஸ்டடியில் அடைத்து வைத்து விட்டார்கள்.

ஏனென்றால் இவர்கள் வெளியில் இருந்தால் ஏதாவது குளறுபடி நடக்க வாய்ப்பு இருக்கும் என்று குணசேகரன் போட்ட ஸ்கெட்ச். ஆனால் எப்பொழுதுமே முட்டாள் பீசாக இருக்கும் கரிகாலனுக்கு இப்பொழுது தான் முதல்முறையாக மூளை வேலை பார்த்து இருக்கிறது. ஆனால் அந்த மூளை குணசேகரனுக்கு சாதகமாக முடிந்து .

இன்னொரு பக்கம் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் தர்ஷினியை மண்டபத்திற்கு கூட்டிட்டு வந்து விட்டார். அத்துடன் ஏற்பாடு பண்ணுன மாதிரி தர்ஷினிக்கும் சித்தார்த்துக்கும் கல்யாண வேலைகள் நடைபெறுகிறது. அதே மாதிரி போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சித்தார்த்தை ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி கூட்டிட்டு வந்து விடுகிறார்கள்.

ஆனால் வரும் பொழுது கதிரிடம் இந்த கல்யாணத்தை நாங்கள் நினைத்தபடி நடத்திக் காட்டுவோம் என்று சவால் விட்டுட்டு போயிருக்கிறார். இந்த விஷயத்தை சக்தி ஜனனிடம் ஃபோன் பண்ணி சொல்கிறார். உடனே வழக்கம் போல் ஜனனி வாய்சவடால் விட்டு இந்த கல்யாணத்தை நாங்கள் நடத்த விடமாட்டோம்.

பொங்கி எழுப்போகும் தர்ஷினி

கண்டிப்பாக இந்த விஷயத்தில் குணசேகரன் தோற்கப் போகிறார் என்று வாயாலேயே வடை சுடுகிறார். ஆனால் இதற்கு மேலையும் இவர்களை எல்லாம் நம்பி இருப்பது வேஸ்ட் என்று தர்ஷினி துணிச்சலாக முடிவெடுக்க போகிறார். அதுவும் குணசேகரன் கூடவே இருந்து குழி பறிக்கப் போவது தர்ஷனாக தான் இருக்கப் போகிறது.

அந்த வகையில் தர்ஷனின் உதவியுடன் தர்ஷினி குணசேகரனுக்கு மிகப்பெரிய ஆப்பை வைக்கப் போகிறார். ஏற்கனவே ஜீவானந்தம், தர்ஷினி இடம் ஒரு அப்பா என்கிற முறையில் பல அட்வைஸ் களையும் தன்னம்பிக்கையும் கொடுத்திருக்கிறார்.

அத்துடன் எந்த இடத்தில் வேகத்தையும் விவேகத்தையும் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவையும் புகட்டி இருக்கிறார். அதனால் தான் குணசேகரன் கூடவே இருந்து தர்ஷினி காய் நகர்த்தி வந்திருக்கிறார். தற்போது யாரையும் நம்பாமல் தர்ஷினியை குணசேகரனுக்கு எதிராக நின்னு ஒட்டுமொத்த கூட்டத்தையும் அடக்கப் போகிறார். இதுதான் குணசேகரனுக்கு விழுகிற முதல் அடியாக இருக்கப் போகிறது.

Trending News