சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

நண்பரின் மனைவி மீது ஆசைப்பட்ட ஹீரோ.. சந்தி சிரிக்க வைத்த நடிகை

ஹீரோ ஒருவர் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு தான் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தார். ஆனால் திறமை இருக்கும் இடத்தில் சில கெட்ட பழக்கங்களும் உள்ளது போல பெண்கள் விஷயத்தில் ஹீரோ மிகவும் வீக்காக இருந்துள்ளார். இதையே வைத்து பல நடிகைகளுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்து இருக்கிறார்.

இந்த சூழலில் ஹீரோவின் நண்பரின் மனைவியின் மீது அவருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கும் ஹீரோவை பிடித்திருந்ததால் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கின்றனர். இவ்வாறு சில வருடங்களாக இந்த உறவு போய்க்கொண்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். இதை தொடர்ந்து அந்த படத்தில் நடித்த ஒயிட் பியூட்டி உடன் நடிகர் நெருக்கமாக இருந்துள்ளார். படப்பிடிப்பு தளத்திலேயே இருவரும் அதிகம் நேரத்தை செலவிடுவதை பார்த்து அங்கு உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

Also Read : என் கூட 6 மாசம் மட்டும் இரு, அடுத்த லெவலுக்கு கூட்டிட்டு போறேன்.. சீரியல் நடிகையிடம் தவறாக பேசிய இயக்குனர்

இந்த விஷயம் நண்பரின் மனைவிக்கும் தெரிய வர ஹீரோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் ஹீரோ தொடர்ந்து ஒயிட் பியூட்டியுடன் பழகி வந்ததால் நண்பரின் மனைவி சந்தி சிரிக்க வைத்து விட்டார். தன்னை இந்த நடிகர் மற்றும் அவரது நண்பர்கள் பலவந்தப்படுத்தியதாக புகார் கொடுத்து விட்டார்.

இதனால் ஹீரோவின் மானம் காற்றில் பறந்துவிட்டது. ஆனாலும் தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து ஹீரோ இந்த வழக்கில் இருந்து வெளியே வந்துவிட்டார். அதன் பிறகு சில காலம் ஹீரோவுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலும் மீண்டும் படங்களில் இப்போது நடித்து வருகிறார்.

Also Read : பிரேக்கப் ஆன பிறகு டாப் ஹீரோக்களின் பட வாய்ப்புகளை இழந்த நடிகை.. ஆசைக்கு அடிபணியாததால் நடந்த திடீர் திருமணம்

Trending News