புதன்கிழமை, ஜனவரி 15, 2025

300 எபிசோடை வெற்றிகரமாக கடந்த சிறகடிக்கும் ஆசை சீரியலின் ஆட்டநாயகன்.. முத்துவிற்கு அடித்த ஜாக்பாட்

Hit the jackpot for muthu: விஜய் டிவியில் எப்பொழுது சிறகடிக்கும் ஆசை சீரியல் ஆரம்பித்ததோ, அப்பொழுதே நல்ல காலம் பிறந்து விட்டது என்பதற்கேற்ப தொடர்ந்து டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்து விட்டது. காரணம் நடுத்தரமான குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் அனைத்தையும் எதார்த்தமாக காட்டி ஒவ்வொருவருடைய நடிப்பும் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.

முக்கியமாக இந்த சீரியலின் ஆட்ட நாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கும் முத்துவின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்து விட்டது. எப்படி சன் டிவி எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து அனைவரையும் கவர்ந்தாரோ அதேபோல திரும்புகிற இடமெல்லாம் முத்துவின் புராணம் தான் ஒளித்துக் கொண்டிருக்கிறது.

அந்த அளவிற்கு சின்ன திரையில் ஜொலித்து விட்டார். தற்போது வெற்றிகரமாக 300 எபிசோடு தாண்டிய நிலையில் அதை மகிழ்ச்சியோடு மொத்த டீமும் கொண்டாடுகிறார்கள். அதைத் தொடர்ந்து முத்து கேரக்டரில் நடித்து வரும் வெற்றி வசந்த் அவருடைய இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோவிற்கு வந்திருக்கிறார். அதில் ரசிகர்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்திருக்கிறார்.

Also read: கதிருக்கு ராஜியை திருமணம் செய்து புருஷன் மானத்தை வாங்கிய கோமதி.. இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்ல இருந்திருக்கலாம்

அப்பொழுது வெற்றி வசந்த் கூடிய விரைவில் என்னை பெரிய திரையிலையும் பார்க்க போகிறீர்கள். அதற்கும் உங்களுடைய பேர் ஆதரவு எனக்கு வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அத்துடன் ஏற்கனவே நான் சில வெப் சீரியஸ் பண்ணிக் கொண்டிருக்கிறேன். மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் அதை அனைத்தையும் நீங்கள் பார்க்கும் நேரம் வந்துவிடும் என்று கூறியிருக்கிறார்.

அப்பொழுது இதைக் கேட்ட ரசிகர் ஒருவர், அப்படி நீங்கள் வெள்ளி திரையில் பிஸியாகி விட்டால் சிறகடிக்கும் சீரியலில் நடிப்பீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு முத்து எனக்கு எவ்வளவு படங்கள், பெரிய பெரிய வாய்ப்புகள் வந்தாலும் அது என்னுடைய பார்ட் டைம் வேலையாக தான் இருக்கும். எந்த காரணத்தைக் கொண்டும் நான் இதிலிருந்து விலக மாட்டேன். எப்பொழுது சுபம் என்று போடுகிறார்களோ அப்பொழுதுதான் எனக்கு எண்டு கார்டு இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

Also read: முத்துவிடம் கையும் களவுமாக சிக்கப் போகும் மச்சான்.. விஜயாவிடம் ஒத்து ஊதும் ரோகிணி, மீனாவிற்கு வரும் பிரச்சினை

Trending News