புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரஜினிக்கு முன் ஜெயிலரில் நடிக்க இருந்த ஹீரோ.. 50 கோடி கூட வசூல் ஆயிருக்காது

Jailer-Rajini: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் மோகன்லால், ஜாக்கி ஷெராப் மற்றும் சிவராஜ் குமார் போன்றோர் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தனர்.

இந்த சூழலில் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு முன் வேறு ஒரு ஹீரோ நடிக்க இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இளம் இயக்குனரான நெல்சன் மிகக்குறுகிய காலத்திலேயே நயன்தாரா, விஜய், ரஜினி போன்ற பிரபலங்களின் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் பீஸ்ட் பட ரிலீசுக்கு முன்பே உருவானது தான் ஜெயிலர் கூட்டணி.

Also Read : 5 வருடத்திற்கு முன்பே சமாளித்த ரஜினியிடம் தோத்துப்போன விஜய்.. என்னைக்கும் கழுகு கழுகு தான்

அதுவும் விஜய்யின் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் சூப்பர் ஸ்டார் பின் வாங்காமல் நெல்சன் மீது நம்பிக்கை வைத்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். அதற்கு கைமேல் பலனாக கிட்டத்தட்ட 600 கோடியை தாண்டி வசூல் செய்தது.

இதனால் உச்சி குளிர்ந்து போய் கலாநிதி மாறன் படக்குழுவுக்கு பரிசுகளை வாரி வழங்கி இருந்தார். இந்த சூழலில் ஜெயிலர் கதையில் நெல்சன் முதலில் தேர்வு செய்திருந்தது நடிகர் சிரஞ்சீவியை என கூறப்படுகிறது. இந்த கதையை கேட்ட சிரஞ்சீவி அவருக்கு உண்டான ஆக்சன் மற்றும் மாஸ் பாடல்கள் இல்லை என மறுப்பு தெரிவித்து விட்டாராம்.

Also Read : ரஜினி கர்நாடகா பக்கம் வரக்கூடாது.. நீ இங்க வந்தா நாக்க அறுப்போம், சீறிப்பாய்ந்த பயில்வான்

அதன் பிறகு தான் ரஜினி இந்த கதையில் நடித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் சிரஞ்சீவி நடித்திருந்தால் இந்த படம் 50 கோடி கூட வசூல் செய்திருக்காது என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் கூட அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் போலா சங்கர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடித்திருந்தார்.

இந்த படம் வசூலில் பெருத்த அடிவாங்கி மண்ணை கவியது. இந்நிலையில் ஜெயிலர் வெற்றிக்கு நெல்சன் ஒரு முக்கிய காரணமாக இருந்த போதும் ரஜினி என்ற மாஸ் நடிகரின் பின்புலமும் பக்கபலமாக அமைந்தது. மேலும் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி முன்னணி நடிகராக இருந்தாலும் அவர் நடித்திருந்தால் ஜெயிலர் இந்த அளவுக்கு வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Also Read : தனுஷ் முதல் ரஜினி வரை மரண ஹிட் கொடுக்கும் அனிருத்.. ஒட்டவே முடியாத அளவிற்கு சர்ச்சையை கூட்டிய சிம்பு

Trending News