சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அந்த கேரக்டராவது எனக்கு கொடுங்க.. வாய்ப்பு இல்லாமல் இறங்கி வந்த ஹீரோ

பிரபல சேனலில் வெற்றி பெற்ற ஒரு சீரியலில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் இந்த நடிகர். முதல் சீரியலே அவருக்கு மிகப்பெரும் அடையாளமாக அமைந்தது. ஏகப்பட்ட பெண் ரசிகைகளும் அவருக்கு கிடைத்தார்கள்.

அதனாலேயே அந்த சீரியல் வருட கணக்கில் ஓடியது. ஆனால் எதற்கும் முடிவு உண்டு என்பதற்கு ஏற்ப ஒரு சுபயோக தினத்தில் அந்த சீரியலுக்கு சுபம் போட்டனர். இதனால் அந்த ஹீரோவின் அடுத்த சீரியல் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அதற்கேற்றார் போல் மற்றொரு சேனலில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார் இந்த நடிகர். ஆனால் அவருடைய போதாத காலம் அந்த சீரியலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அதனாலயே ஆரம்பித்த சுவடு தெரியாமல் முடிவுக்கு வந்தது அந்த சீரியல்.

Also read: திருமணமான ஒரு வருடத்திலேயே விவாகரத்து.. மீண்டும் சிங்கிளான பிரியமான நடிகை

அதைத்தொடர்ந்து நடிகர் இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி அவர் ஒரு சீரியலில் ஹீரோவுக்கு அண்ணனாக நடிக்க முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த நடிகருக்கு எதுவும் கிடைக்காமல் போகவே இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறாராம். ஹீரோ வேஷம் வேண்டாம் அண்ணன் வாய்ப்பாவது கொடுங்கள் என அவர் ஒரு சீரியல் வாய்ப்புக்கு ஓகே சொல்லி இருக்கிறார். நடிகரின் நிலை இப்படி ஆயிடுச்சே என பலரும் இதைப் பற்றி சத்தம் இல்லாமல் பேசி வருகின்றனர்.

Also read: தொழிலதிபரை ஏமாற்றிய நடிகை.. வசமாக சிக்கிய சம்பவம்

Trending News