வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

நம்பர் நடிகைக்காக மனைவியை பிரிந்த ஹீரோ.. செட்டில்மென்ட் மட்டும் பல கோடியாம்

Gossip: இப்போது திருமணம் விவாகரத்து எல்லாம் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. நினைத்தால் உடனே கல்யாணம் செய்து கொள்ளும் பிரபலங்கள் இருக்கின்றனர். அதேபோல் சிறு பிரச்சினை என்றாலும் பிரிவு என்ற முடிவை தேடி ஓடுகின்றனர்.

சமீபத்தில் கூட பிரபல நடிகர் தன் மனைவியை பிரிந்தது பெரும் விமர்சனமாக மாறியது. ஆனால் இந்த கல்யாணத்தால் நடிகருக்கு வலியும் வேதனையும் தான் மிச்சம்.

இது ஒரு ரகம் என்றால் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக இருக்கும் இன்னொரு ஹீரோ திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும்போது ஒரு நடிகையின் மீது காதல் வயப்பட்டார். இதனால் மனைவியை விவாகரத்தும் செய்தார்.

மனைவியை கஷ்டப்பட விடாத ஹீரோ

அது மட்டும் இன்றி சென்னை முழுவதிலும் ஆடம்பர பங்களா, அப்பார்ட்மெண்ட், வில்லா என பல சொத்துக்களை எழுதி கொடுத்தாராம். மேலும் விவாகரத்து நடக்கும் போது சில லட்சம் செட்டில்மென்ட் தொகையையும் கொடுத்திருக்கிறார்.

அவர் எழுதி வைத்த சொத்துக்களின் மதிப்பு மட்டுமே 30 கோடி என்கின்றனர். ஒரு நடிகைக்காக மனைவியை விவாகரத்து செய்தார் என நடிகரை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தது. ஆனால் மனைவி கஷ்டப்படக்கூடாது என அவர் இத்தனை கோடி கொடுத்தது இதுவரை யாருக்கும் தெரியாது.

ஆனால் விவாகரத்து செய்து என்ன பிரயோஜனம் நடிகரின் காதலியான நம்பர் நடிகை ஏகப்பட்ட கண்டிஷன் போட்டதால் அந்த காதலும் பிரேக் அப் ஆனது. தற்போது நடிகர் வேறு ஒரு வாழ்க்கை துணையை தேடிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

Trending News