செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ரீ-என்டரில் கலக்கும் ஹீரோ.. விஜய் சேதுபதியை மிஞ்சும் அளவிற்கு 11 படங்களை கைப்பற்றிய பயில்வான்

The hero who mixes in re-enter: பொதுவாக கதாநாயகனாக நடிக்கும் ஹீரோ அவருடைய இமேஜிற்கு எந்தவித பங்கமும் வராமல் ஹேண்ட்ஸம் லுக் உடன் துள்ளலாக நடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் விஜய் சேதுபதியை பொருத்தவரை எனக்கான முக்கியத்துவம் அந்த படத்தில் இருந்தால் அதை நான் நடிக்க தயார் என்று சொல்வதற்கு ஏற்ப எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க கூடியவர்.

அதனாலேயே ஹீரோவாகவும், வில்லனாகவும், குணசித்திர கேரக்டராகவும் பல கெட்டப்புகளை போட்டு வருடத்திற்கு 10 படங்களுக்கும் மேல் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். தற்போது இவரையே மிஞ்சும் அளவிற்கு பழைய பயில்வான் வந்துவிட்டார். கிட்டத்தட்ட விஜய் சேதுபதி போல தான் இவரும். அதாவது 90களில் வில்லன் கேரக்டரிலும், கதாநாயகனாகவும், கெஸ்ட் ரோலிலும் நடித்து வந்தவர் தான் சரத்குமார்.

அதன் மூலம் இவருக்கு என்று சினிமாவில் தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இப்படியே கிட்டத்தட்ட 145 படங்களுக்கும் மேல் நடித்து விட்டார். அதன்பிறகு ரீ எண்ட்ரியாக உள்ள நுழைந்த இவருக்கு மறுபடியும் ஜாக்பாட் அடித்து விட்டது. அந்த வகையில் 11 படங்களில் நடிக்கும் வாய்ப்பை தற்போது கைப்பற்றி கமிட் ஆகியிருக்கிறார்.

Also read: மர்ம முடிச்சை அவிழ்க்காத வெற்றி மாறன்.. விடுதலை 2-க்காக விஜய் சேதுபதி அமெரிக்கா சென்ற ரகசியம்

தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலிருந்தும் வரும் வாய்ப்பை மிஸ் பண்ணாமல் ஏற்றுக்கொண்டார். அந்த வகையில் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அடங்காதே படத்திலும், நிர்மல் குமார் இயக்கத்தில் நா நா, ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் பாம்பன் மற்றும் ஷியாம் பிரவீன் இயக்கத்தில் தி ஸ்மைல் மேன் போன்ற படங்களிலும் கமிட்டாகி இருக்கிறார்.

அத்துடன் இயக்குனர் ராமதாசன் இயக்கத்தில் ஆழி படத்திலும், செல்வராஜ் இயக்கத்தில் விடியல், கார்த்திக் நரேன் இயக்கத்தில் நிறங்கள் மூன்று மற்றும் கன்னடத்தில் ஓமனே, கண்ணப்பா போன்ற படங்களிலும் கமிட்டாகி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு இவரிடம் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் மறுபடியும் இவருடைய அசுரத்தனமான நடிப்பையும், 90ஸ் கதாநாயகனை மறுபடியும் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. விஜய் சேதுபதி தான் ஒரு வருடத்திற்கு அதிக படங்களை நடித்து தள்ளுவர். தற்போது இவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் சரத்குமார் செகண்ட் இன்னிங்ஸில் கலக்கி கொண்டு வருகிறார்.

Also read: வாய்ப்புக்காக கமல் கெட்டப்பை பயன்படுத்திய விஜய் சேதுபதி.. உலக நாயகனுக்கு கொடுத்த டஃப்

Trending News