திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமலுக்கு முன்பு சப்பானியாக நடிக்க இருந்த ஹீரோ.. அல்வா போல் கிடைத்த வாய்ப்பு, 45 வருட சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

16 Vayathinile Movie: உலகநாயகன் கமல்ஹாசனின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் தான் 1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே. இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் முதல் படம் அவருக்கு மிகப்பெரிய  பெயரை வாங்கித் தந்தது.

ஆனால் இன்று வரை இந்த படத்தையோ இதில்  நடித்த கதாபாத்திரங்களையோ யாராலும் மறக்க முடியாது. ரஜினி, கமல், ஸ்ரீதேவி, காந்திமதி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்தது. இந்த படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன வாயிலாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

Also Read: இரங்கல் தெரிவித்தால் கடமை முடிந்ததா.? தூக்கிவிட்ட தயாரிப்பாளரின் மரணத்தை கண்டு கொள்ளாத பாரதிராஜா, கமல்

இந்த படத்தில் மயில் கேரக்டரில் நடித்த ஸ்ரீதேவி, சப்பானி கேரக்டரில் கமல்ஹாசன், பரட்டை கேரக்டரில் நடித்த ரஜினி போன்றோரின் கதாபாத்திரம் இன்றும் பேசப்படுகிறது. இந்த படத்தில் கமலின் சப்பானி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது  நடிகர் சிவச்சந்திரன் தானாம். 

45 வருடத்திற்கும் முன்பு நடந்த இந்த சீக்ரெட்டை படத்தின் இயக்குனர் பாரதிராஜா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகர் சிவச்சந்திரன் நடிகர் லட்சுமியின் முதல் கணவராவார். இவர் அல்வா போல் கிடைத்த வாய்ப்பை தவிர விட்டார் என்று சொல்லணும்.

Also Read: 16 வயதினிலே படம் பற்றி அறியாத 5 விஷயங்கள்.. ஆரம்பத்தில் இல்லாத 2 முக்கிய கதாபாத்திரம்

நடிகர் சிவச்சந்திரன் அன்னபூரணி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, பல்வேறு படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். இருப்பினும் இவர் சப்பானி கேரக்டருக்கு முதலில் தேர்வானதும் ஒரு சில காரணங்களால் அவர் விலகியதால் கமல் அவருக்கு பதில் நடிக்க வேண்டியதாயிற்று.

இந்த ரகசியம் இப்போது அந்தப் படத்தின் இயக்குனர் பாரதிராஜா மூலம் வெளிவந்துள்ளது. ஆனால் கமல் அந்த கதாபாத்திரத்தில்  நடித்ததனாலே படம் சூப்பர் ஹிட் ஆனது. அந்த அளவிற்கு சப்பானி கேரக்டருக்கு தகுந்தமான வெகுளித்தனத்தை கமல், 16 வயதினிலே படத்தில் தத்துரூபமாக  காட்டினார்.

Also Read: ரஜினி, கமலை ஓரங்கட்டிய நடிகர்.. ஒரு மணி நேரத்திற்கு வாங்கிய சம்பளம்

Trending News